இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற இசைக்குழு நடத்துனர்களில் ஒருவரான ஆர்டுரோ டஸ்கானினி, யாருக்குப் புகழ் உரியதோ, அவர்களுக்கே அதைக் கொடுப்பவர் என்று நினைவுகூறப்படுகிறார். டேவிட் ஈவென் இசை நடத்துனர்களைக்குறித்துத் தானெழுதிய ((Dictators Of The Baton) என்ற நூலில் டஸ்கானினியைப்பற்றி எழுதியுள்ளார். அவர் பெத்தோவனின் ஒன்பதாவது சிம்ஃபனி பயிற்சியை முடித்தபொழுது, அதைக் கேட்டுக்கொண்டிருந்த நியூயார்க் பில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் எழுந்து நின்று பலத்த கரகோஷம் செய்தனர். கைதட்டுதல் நின்ற பொழுது, டஸ்கானினி கண்களில் நீர்மல்க, “நானல்ல… அது பெத்தோவன்! டஸ்னானினி ஒன்றுமில்லை” என்றார்.

அப்போஸ்தலர் பவுல் எழுதிய புதிய ஏற்பாட்டு நிருபங்களில் ஆவிக்குரிய உள்ளான கண்ணோட்டத்திற்கும், ஊந்துதலுக்கும் உரிய புகழை ஏற்றுக்கொள்ள, பவுல் மறுத்துவிட்டான். கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்த அநேகருக்கு, தான் ஆவிக்குரிய தாயும் தகப்பனுமாயிருப்பதை அறிந்திருந்தார். அநேகருடைய விசுவாசம், நம்பிக்கை, அன்பை பெருகச் செய்ய தான் அதிகப் பாடுகளை சகித்து பிரயாசப்பட்டதை ஒத்துக்கொண்டார் (1 கொரி 15:10). ஆனாலும், தனக்கிருந்த அன்பு விசுவாசம் உள்ளுணர்விற்கான பாராட்டை நல்மனசாட்சியுடன் ஏற்க மறுத்துகிட்டார்.

பவுல் தன் வாசகர்களுக்காகவும், நமக்காகவும் “சகோதர, சகோதரிகளே, அது நானல்ல கிறிஸ்துவே… பவுல் ஒன்றுமில்லை” என்றார், நாம், பாராட்டுக்குரிய ஒருவருடைய  தூதுவர்களேயன்றி வேறில்லை!