“கிறிஸ்துமஸ் வருவதற்கு இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கிறது?” இக்கேள்வியை என் பிள்ளைகள் குழந்தைகளாயிருந்த போது அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் வருகையின் நாள் காட்டி ஒன்றின் மூலம் கிறிஸ்துமஸ் நாளை கணக்கிட்டுக் கொண்டிருந்தாலும், காத்திருத்தல் அவர்களுக்கு வேதனையாக இருந்தது.
ஒரு குழந்தையின் கஷ்டத்தோடு கூடிய காத்திருத்தலை நாம் சுலபமாக புரிந்து கொள்ள முடிந்தாலும், இந்த சவால் குழந்தைகளுக்குமட்டுமென குறைவாக மதிப்பிட முடியாது, அது அனைத்து தேவ ஜனங்களுக்குரியது. ஏனெனில் “இஸ்ரவேலை ஆளப்போகிறவர் பெத்லகேமிலிருந்து புறப்பட்டு வருவார் (மீகா 5:2). அவர் நின்று கொண்டு கர்த்தருடைய பலத்தோடு தம் மந்தையை மேய்ப்பார் (வச. 4). என்ற மீகா தீர்க்கனின் வாக்கினைப் பெற்ற ஜனங்கள், இதன் நிறைவேறுதலுக்கு சுமார் 700 ஆண்டுகள் காத்திருந்த பின்னர் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது அது நிறைவேறிற்று (மத். 2:1). ஆனால், இன்னும் சில தீர்க்க தரிசனங்கள் நிறைவேற வேண்டியுள்ளது. இயேசு திரும்ப வருவார் என்ற நம்பிக்கையோடு நாம் காத்திருக்கின்றோம். “ஆகையால் தேவ ஜனங்கள் அனைவரும் நிலைத்திருப்பார்கள். அவர் இனிப் பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்” (மீகா 5:4). நம்முடைய நீண்ட காத்திருத்தல் முடிவடையும் போது நாமும் மிகவும் மகிழ்ந்திருப்போம்.
நம்மில் அநேகருக்கு காத்திருத்தல் எளிதானதல்ல. ஆனால், இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் (மத். 28:20) என்ற வாக்கை கனப்படுத்துவார் என்று நம்பி காத்திருப்போம். இயேசு கிறிஸ்து பெத்லேகமில் பிறந்த பொழுதே நம்மை வாழ்வின் பரிபூரணத்திற்குள்ளும் (யோவா. 10:10) குற்றம் சாட்டப்படாத வாழ்விற்குள்ளும் வழி நடத்துகின்றார். அவருடைய பிரசன்னம் நம்மோடு இருப்பதை அனுபவித்துக் கொண்டே அவருடைய வருகைக்கு நாம் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.