அந்த பிரசித்திபெற்ற மாயப்புன்னகை
எனக்கும் என் மனைவிக்கும் பாரீஸிலுள்ள (லூவருக்குச் செல்ல வாய்ப்பு) கிடைத்தது. என் பதினொரு வயது பேத்தியை போனில் அழைத்து மிகப்பிரபலமான மோனலீசா படத்தைப் பார்த்ததைச் சொன்னேன். உடனே “அவள் புன்னகைகிக்கிறாளா?” என்று கேட்டாள்.
இந்தப் படத்தைக் குறித்த மிகப்பெரிய கேள்வியே அதுதானே? லியோனார்டோ டாவின்சி சுமார் 600 வருடங்களுக்கு முன்னே இச்சித்திரத்தை வர்ணந்தீட்டியிருந்தாலும். அந்தப்பெண் சிரிக்கிறாளா, இல்லையா என்பது இன்றும் ஒரு தீராத புதிராகவே இருக்கிறது. அந்தச் சித்திரத்தின் அழகில் மயங்கினாலும், மோனலீஸா என்ன செய்கிறாள் என்று யாராலும் சொல்லவே முடியவில்லை.
அந்தச் சித்திரத்தின் புதிரில் “புன்னகை” ஒரு பகுதி. ஆனால், அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது? புன்னகையைக் குறித்து வேதாகமத்தில் ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா? உண்மையில் வேதாகமத்தில் ஐந்திற்கும் குறைவாகவே இவ்வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால், நாம் அதைச் செய்ய வேண்டுமென்பதுபோலக் குறிப்பிடப்படவேயில்லை. ஆனால், நகைப்பிற்கு வழிநடத்தும் மனப்பான்மையைக் குறித்துச் சொல்லுகிறது. அதுவே மனமகிழ்ச்சி எனும் வார்த்தை, கிட்டத்தட்ட 250 தடவைகள் வருகிறது. தேவனை நினைக்கும் பொழுது என் இருதயம் களிகூறுகிறது (சங். 28:7), நீதிமான்களே கர்த்தருக்குள் களிகூருங்கள் (சங். 33:1). உம்முடைய சாட்சிகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி (சங். 119:111); கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம் (சங். 126:3).
கர்த்தர் நமக்காக யாவற்றையும் செய்து முடிப்பதன் மூலம் கொடுக்கும் மகிழ்ச்சி, நமது முகத்தில் புன்னகையை வருவிக்குகிறது.
வல்லமையுள்ள குழந்தை
நான் அவனை முதல்முதலாகப் பார்த்தபொழுது அழுதுவிட்டேன். தன் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும் புதிதாகப் பிறந்த குழந்தையைப் போலிருந்தான். ஆனால், அவன் இனி இயேசுவின் கைகளில் இருக்கும்வரை ஒருபோதும் கண்விழிக்கப் போவதில்லை என்று எங்களுக்குத் தெரியும்.
அவன் அநேக மாதங்களாக உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தான். பின்பு அவனுடைய தாயார் இருதயத்தைக் வேதனையடையச் செய்யும் ஒரு மின்னஞ்சல் மூலமாக அவன் மரணத்தை எனக்குத் தெரிவித்தாள். அவள் தனக்குள்ளே ஆழமாக, மிக ஆழமாக, முனகிக் கொண்டிருக்கும் வேதனையைக் குறித்து எழுதினாள். அதன்பின் அவள், அந்த சிறு குழந்தையின் குறுகிய வாழ்க்கையின்மூலம், தேவன் எங்கள் இருதயங்களில் எவ்வளவு ஆழமாகத் தம் அன்பின் கிரியையைப் பதித்திருக்கிறார்! அந்த வாழ்க்கை எவ்வளவு வல்லமையுள்ளதாயிருந்தது என்று சொன்னாள்!
வல்லமையா? அவள் எப்படி அதைச் சொல்ல முடியும்?
அந்தக் குடும்பத்தின் விசேஷித்த பையன் அவர்களுக்கும் - எங்களுக்கும் - எல்லாவற்றிற்கும் நாம் தேவனையே சார்ந்திருக்க வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டினான். அதுவும், மிக மோசமான காரியங்கள் நேரிடும்போது! கடினமான ஆனால், ஆறுதலான சத்தியம் என்னவென்றால், தேவன் நம்மை நம்முடைய வேதனைகளில் சந்திக்கிறார் என்பதே. ஒரு மகனை இழப்பதின் வேதனை அவருக்குத் தெரியும்.
நம்முடைய அழமான வேதனையின் நேரங்களில் நாம் தாவீதின் சங்கீதங்களை வாசிக்கிறோம்; ஏனென்றால் அவன் அவற்றை தன் சொந்த வேதனையின் அனுபவத்திலிருந்து எழுதியுள்ளான். “என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்?” என்று கேட்டான் (வச. 13:2). “நான் மரண நித்திரை அடையாதபடி என் கண்களைத் தெளிவாக்கும்” (வச. 3). ஆனாலும், தாவீது தன் மிகப்பெரிய கேள்விகளைக் தேவனிடத்தில் விட்டுவிட்டான். “நான் உம்முடைய கிருபையின் மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூறும்.
தேவனால் மட்டுமே நம் வாழ்வின் மிக துக்ககரமான நிகழ்வுகளுக்கு முடிவான அர்த்தம் கொடுக்க முடியும்.
யாரென்று வெளிப்படுத்தாமல் வாழ்வது
ஜேன் யோலன் எழுதிய “யாரென்றறியப்படாமலிருக்க முயற்சித்தல்” என்ற கட்டுரையில் தங்கள் உள்ளான மனதில் தாங்கள் யார் என்று அறியப்படாமல் தங்களை மறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தான் சிறந்த எழுத்தாளர்கள் என்று எழுதியிருந்தார். சொல்லப்படுகிற கதை தான் முக்கியம்; கதை சொல்பவரல்ல.
நாம் சொல்லுகிற கதை நமக்காக தன் ஜீவனையே கொடுத்த இரட்சகர் இயேசுவைப் பற்றியதே. மற்ற விசுவாசிகளோடு இணைந்து நாமும் அவருக்காக வாழ்ந்து அவருடைய அன்பை பிறருடன் பகிர்ந்து கொள்கிறோம்.
ரோமர் 12:3-21 இயேசுவைப் பின் பற்றுகிறவர்களுக்கிடையே உள்ள உறவில் ஊடுருவியிருக்க வேண்டிய தாழ்மையையும், அன்பையும் குறித்துப் போதிக்கிறது. உங்களைப் பற்றியும் உங்கள் முக்கியத்துவத்தைப் பற்றியும் மிதமிஞ்சி எண்ணிக்கொள்ள வேண்டாம். மாறாக, தேவன் நம்மெல்லாருக்கும் தந்திருக்கிற விசுவாசத்தின் வெளிச்சத்திலே நம்முடைய திறமைகளை சரியாக நிதானித்தறிய முயற்சிப்போமாக. “சகோதர சிநேகத்திலே ஒருவர்மெலோருவர் அன்பாயிருப்போமாக. கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக் கொள்வோமாக” (வச. 3,10).
நம்முடைய கடந்தகால சாதனைகளைக் குறித்த பெருமை பிறருடைய தாலந்துகளைக் காணாதபடி குருடாக்கிப் போடும். கர்வம் எதிர்காலத்தை பாழாக்கிவிடும்.
இயேசுவுக்குப் பாதையை செவ்வைப்படுத்தும் ஊழியத்தைப் பெற்ற யோவான் ஸ்நானகன், “அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” என்றான். அது நம்மெல்லாருக்கும் தேவையான ஒரு சிறந்த குறிக்கோள் அதுவே.
இவர் யாரோ?
நான் மாணவனாயிருந்தபோது “உங்கள் சாய்வு மேஜைகளிலிருந்து எல்லாவற்றையும் அகற்றிவிட்டு ஒரு பேப்பரும் பென்சிலும் எடுத்துக் கொள்ளுங்கள்.” என்ற அச்சுறுத்தும் அறிவிப்பைக் கேட்டவுடனே, “பரீட்சை நேரம்” வந்துவிட்டது என்று அறிந்து கொண்டேன்.
கடற்கரையில் போதனையோடு ஆரம்பித்த இயேசுவின் அன்றைய தினம் (மாற். 4:1) கடலில் ஒரு சோதனையான வேளையோடு முடிந்தது (வச. 35). இயேசுவின் பிரசங்க மேடையாகப் பயன்படுத்தப்பட்ட அந்தப் படகு இயேசுவையும் அவருடைய சில சீடர்களையும் கடலின் அக்கரைக்குக் கொண்டுபோகப் பயன்படுத்தப்பட்டது. களைப்படைந்த இயேசு படகின் பின்னணியத்தில் படுத்துத் தூங்கிவிட்டார். பயணத்தின்போது அவர்கள் ஒரு பலத்த சுழல்காற்றை எதிர்கொண்டனர் (வச. 37). அவைகளினால் முற்றிலும் நனைந்த சீடர்கள், “போதகரே நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள் பின் இக்காரியம் நிகழ்ந்தது (வச. 38). காலையில் ஜனக்கூட்டத்தை பார்த்து “கேளுங்கள்” என்று அறிவுரை கூறியவர், ஒரு எளிய வல்லமையான கட்டளையை இயற்கைக் காற்றைப் பார்த்து காற்றுக்கு “இரையாதே, அமைதலாயிரு” என்றார் (வச. 39).
காற்றும் கீழ்ப்படிந்தது. மிகவும் பயந்த சீடர்கள் ஆச்சரியப்பட்டு “இவர் யாரோ?” என்றார்கள் (வச. 41). சீஷர்கள் இவர் யாரோ என்று கேட்ட கேள்வி நல்ல கேள்விதான் ஆனால், மெய்யாகவே இயேசு தேவனுடைய குமாரன்தான் என்று சரியாகக் கண்டுகொள்ள அவர்களுக்குச் சற்றுக் காலம் வேண்டியதாயிருந்தது.
இன்றைய காலக்கட்டத்திலும் இயேசுவைப்பற்றி திறந்த உள்ளத்தோடு உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ள அனுபவத்துடன் கேள்வி கேட்பவர்கள் இதே முடிவிற்குத்தான் வருவார்கள். அவர் நமக்கு போதனை செய்பவர்மட்டுமல்ல, ஆராதனைக்கும் உரிய தேவனானவர்.