சட்டத்தை மீறுகிறவர்களும் மதிக்காதவர்களுமான சமுதாயத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் காவல்துறை அதிகாரியிடம் உங்கள் பொறுப்பை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டபோது, தன் அந்தஸ்த்திற்குரிய அதிகாரத் தோரணையோடு பேசாமல், “நாமெல்லாரும் நெருக்கத்திலிருக்கிற மனிதர்கள் மத்தியில் பணிபுரியும் மனிதர்கள்” என்று பதிலுரைத்தார்.
மற்றவர்களோடு தன்னை சமமாக்கி தன்னைத் தாழ்த்தினது, எனக்கு ரோமப்பேரரசால் கொடுமைப்படுத்தப்பட்ட முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்குப் பேதுரு எழுதியதை நினைவுபடுத்தினது. “நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும் இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களாகவும், மனதுருக்கமுள்ளவர்களாகவும், இணக்கமுள்ளவர்களாகவும் இருங்கள் என்று எழுதினான் (1 பேது. 3:8). நெருக்கத்தில் இருப்பவர்களுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த காரியம், மனிதத்தன்மையோடிருப்பதேயாகும் என்று பேதுரு ஒருவேளை சொல்லியிருக்கக் கூடும். அதாவது நமக்குள் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே, நமக்கு உதவும்பொருட்டு குமாரனைப் பிதா ஒரு மனிதனாக பூமிக்கு அனுப்பினபொழுது செய்தது இதுதானோ? (பிலி. 2:7).
விழுந்துபோன மனிதனின் பாவ இருதயத்தின் ஆழத்தை மட்டும் நோக்கும் பொழுது மனிதனின் தகுதியை அலட்சியமாய் நினைக்கத் தோன்றலாம். ஆனால், மனுஷீகமாக இவ்வுலகிற்கு நாம் ஆற்றிய பங்கை நினைத்தால் என்ன தோன்றும்? நாமெல்லாரும் ஒரே தன்மையுடையவர்கள் என்பதை நினைத்து பிறருக்குப் பணிவிடை செய்வதே பூரணமான மனிதத்தன்மை என்று இயேசு போதித்தார். தேவன் நம்மை மனிதனாக நம்முடைய சாயலில் உருவாக்கி நிபந்தனையற்ற தம் அன்பினால் நம்மை மீட்டுக்கொண்டார்.
பல போராட்டங்களில் சிக்கியுள்ள மனிதர்களை இன்று நாம் சந்திப்பது நிச்சயம். நெருக்கங்களிலிருப்பவர்களோடு, நாமும் அவர்களைப் போன்றவர்களே என்கிற எண்ணத்தோடு அவர்களிடம் மனித நேயத்தைக் காட்டுவோமென்றால், நாம் மாபெரும் வித்தியாசத்தை உண்டாக்குவோம் என்பதை சிந்தியுங்கள்.
தேவனை அறிவதற்கும் நம்மை நாமே அறிந்து கொள்வதற்கும் கிடைக்கும் பலன் தாழ்மை.