நாங்கள் வெஸ்ட் ஹைலாண்ட் டெபியர் நாயைப் பல வருடங்களாக வளர்த்துவந்தோம். அது மிகவும் முரட்டுத்தனமான, உயர் ஜாதி நாய். பொந்துகளில் வசிக்கும் இவ்வின நாய்கள், இவை மரநாய்களின் பொந்துகளில் நுழைந்து அவற்றுடன் சண்டைபோடும். எங்கள் வெஸ்ட்டி பல தலைமுறைகளாக, அதன் இனத்துடன் தொடர்பு கொள்ளாமல் இருந்தபோதிலும் அதன் பிறவிக் குணம் போகவில்லை. ஒரு சமயம், எங்கள் வீட்டு பின்புறத்தில் உள்ள பாறைக்கடியில் குழிதோண்டி வசிக்கும் “கிரிட்டர்” பிராணியைப் பார்த்துவிட்டது. விடாப்பிடியாக அதைப்பிடிக்க பல அடி நீளமுள்ள ஒரு பொந்தைத் தோண்டியது. ஒன்றும் அதைத் தடுக்க முடியவில்லை.

இப்பொழுது இந்தக் கேள்வியை ஆராய்ந்து பாருங்கள். மனிதர்களாகி நாம் ஏன் ஏதோ வொன்றைக் கண்டுபிடிக்க தொடர்ந்து முயன்று முயன்று பார்க்கிறோம்? ஏன் ஒருவரும் ஏறாத மலைச்சிகரங்களுக்கு ஏற முயற்சிக்கிறோம்? செங்குத்தான சரிவுகளில் பனிச்சறுக்கு விளையாடுவது ஏன்? பயங்கரமான வேகமாய், பாறைகளினூடாய் பாயும் ஆபத்தான மலை ஓடைகளில் படகை ஓட்டுவதேன்? இயற்கையின் சீற்றங்களுக்கு எதிராய் போராடுவது ஏன்? ஒன்று தன் ஆத்ம திருப்திக்காக ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவது. ஆனால் இன்னும் அதிகம் இருக்கிறது. ஆதாவது, சாகசம்புரியும் தேவனை அறியும் ஆசை அது நமக்குள்ளாக பிறவியிலேயே புதைந்து கிடக்கும் ஆவல். நம்மால் தேவனைத் தேடாமல் இருக்கவே முடியாது.

நாம் அதை அறியாமலிருக்கிறோம். ஏதோ ஒன்றிற்கு ஆசைப்படுகிறோம் என்பது மட்டும்தான் நமக்குத் தெரியும். ‘அது என்னவென்று தெரியாவிட்டாலும், நீ ஏதோ ஒன்றிற்கு ஆசைப்படுகிறாய். ஆனால் அதை அடைய நீ உயிரை பணயம் வைக்கவும் ஆயத்தமாயிருக்கிறாய்’ என்று பிரபல எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் கூறியுள்ளார்.

தேவனே நமது இருதயத்தின் உண்மையான உறைவிடம். பரிசுத்த அகஸ்டினின் மிகப் பிரபலமான கூற்றாகிய ”தேவனே, நீர் எங்களை உமக்கென்று உருவாக்கினீர்; எங்கள் இருதயம் உம்மில் இளைப்பாறும்வரை, எங்களுக்கு இளைப்பாறுதலில்லை”.

இருதயம் என்பதென்ன? அது நமக்குள்ளிருக்கும் தேவன் மாத்திரம் நிரப்பக்கூடிய வெற்றிடம்.