அநேக ஆயிர ஆண்டுகளுக்குமுன், தேவன் மோசேயோடு நேரடியாகப் பேசி, தமது ஜனங்களுக்கு புதிதான ஓர்பண்டிகையையை நியமித்தார் (யாத். 23:16). மோசே குறிப்பிட்டுள்ளபடி நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைக் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையை ஆசரிப்பாயாக என்றார்.
இன்று உலகத்தின் பல நாடுகளில் அறுப்பின் பண்டிகைக்கொத்த பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. கானா நாட்டில் அறுப்பின் பண்டிகையை “யாம் YAM” பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். பிரேசிலில், ஆகாரத்திற்குத் தேவையான விளைச்சல் கிடைத்ததற்காக “Dia de Acao de Gracas” பண்டிகையை ஆசரிக்கிறார்கள். சீனாவில், இலையுதிர் காலத்தின் மத்தியில் “Mid Autumn-(Moon)” திருவிழா உண்டு. அமெரிக்காவிலும், கானடாவிலும் அறுப்பின் பண்டிகை, நன்றி சொல்லும் (Thanksgiving) நாளாகக் கொண்டாடப்படும்.
வெள்ளத்திற்குப்பின், நோவாவிற்கும் அவன் குடும்பத்திற்கும், நமக்கும், வாழ்வதற்குத் தேவையானவற்றைப் பூமியில் தாம் வைத்திருப்பதை நினைவுபடுத்தினார். இதுவே அறுப்பின் பண்டிகைகளின் இலக்காகும். பூமியுள்ளள நாளளவும் விதைப்பும், அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார் (ஆதி. 8:22). அறுவடைக்கான நன்றி நம்மைத்தாங்குகிற தேவனுக்கு மட்டுமே.
நீங்கள் எங்கே வசித்தாலும், நிலத்தின் அறுவடையை எப்படிக் கொண்டாடினாலும், இன்றைக்கு நேரமெடுத்து தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனென்றால், தேவனுடைய சிருஷ்டிக்கும் ஞானமில்லாமல் நமக்கு அறுவடையுமிராது, கொண்டாட்டமுமிராது.
சந்தோஷமான இருதயத்தின் நினைவு, நன்றியே!