பீநட்ஸ் என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கிய சார்லஸ் ஷல்ஸின் நகைச்சுவையையும், அறிவுத் திறனையும் கண்டு நான் அதிகம் மகிழ்ச்சியடைவதுண்டு. எங்களது ஆலயத்திலுள்ள வாலிபப் பிள்ளைகளைச் பற்றிய புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான அவரது கேலிச் சித்திரம் காணப்பட்டது. அந்த படத்தில் ஒரு வாலிபன் அவன் கையில் வேதாகமத்தை வைத்துக் கொண்டு, தொலைபேசியில் அவனது சினேகிதனிடம் “பழைய ஏற்பாட்டிலுள்ள புதிர்களை தெளிவுபடுத்துவதற்கான முதல் படியை எடுத்து வைத்துள்ளேன்… அதை வாசிக்க ஆரம்பிக்கிறேன்” என்று கூறினான்.
ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையின் வல்லமையை புரிந்து கொள்ளவும், அனுபவிக்கவும் 119ம் சங்கீதத்தை எழுதியவருடைய அளவு கடந்த ஆவல் வெளிப்படுகிறது. “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்; நாள் முழுவதும் அது என் தியானம்” (வச. 97). தேவனுடைய வார்த்தையின் மேலிருந்த அளவு கடந்த ஆவல் அதன் ஆசிரியர் ஞானத்தில், அறிவில் வளர்ச்சியடைந்து தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய அவரை வழிநடத்தினது (வச. 100).
வேதாகமத்தில் உள்ள புதிர்களை தெளிவுபடுத்த எந்தவித அதிசயமான செயல் திட்டங்கள் ஏதும் இல்லை. அந்த செயல் திட்டங்கள் மனரீதியானது மட்டுமல்ல, நாம் வாசிக்கும் பகுதிக்கும் ஏற்ப நாம் நடக்கவும் வேண்டும். வேதாகமத்தில் சில பகுதிகள் நம்மால் புரிந்துகொள்ள இயலாதவைகளாக இருக்கலாம். நாம் நன்றாக புரிந்து கொண்ட உண்மைகளை கடைபிடித்து, செயல்படுத்த “உம்முடைய வார்த்தைகள் என் நாவிற்கு எவ்வளவு இனிமையானவைகள் என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாய் இருக்கும். உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன். ஆதலால், எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன்” (வச. 103-104)
ஆச்சரியமான கண்டுபிடிப்புகளுக்கான பயணம் தேவனுடைய வார்த்தையில் உள்ளது.
தேவனுடைய வார்த்தைகளை வாசித்து அவைகளைக் கடைபிடிக்கும் நமது உள்ளான ஈடுபாடு, தேவனுடைய அன்பையும், வல்லமையையம் அறிந்து கொள்வதற்கான நமது அனுதின ஆன்மீக பயணத்தில் ஆரம்பமாகிறது.