எனது அலுவலக அறையின் ஜன்னலுக்கு வெளியே, அணில்கள் வர இருக்கும் குளிர்காலத்திற்காக கொட்டைகளைச் சேகரித்து பத்திரமான இடங்களில் அதே சமயம் மறுபடியும் எளிதாக எடுக்கக்கூடிய இடங்களில் வைப்பதற்காக பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடித்திரியும் காட்சி தெரியும். அவைகள் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடித்திரியும் பொழுது ஏற்படுத்தும் ஓசை எனக்கு மகிழ்ச்சியான பொழுது போக்காக இருக்கும். ஒரு கூட்ட மான்கள் எங்கள் வீட்டின் பின் முற்றத்தில் எந்த ஒரு சத்தமுமில்லாமல் அமைதியாக கடந்து செல்லும். ஆனால், ஒரு அணில், பெரிய படையே அழைத்தது போன்ற சத்தத்தை ஏற்படுத்தும்.

அந்த இரு பிராணிகளும் வேறு ஒரு பழக்கத்திலும் வேறுபட்டவைகளாக உள்ளன. மான்கள் குளிர் காலத்திற்காக எந்த விதமான ஆயத்தமும் செய்வது கிடையாது. பனிகாலம் வரும் பொழுது அவைகள் வழியில் என்ன கிடைக்கின்றனவோ அவற்றை உட்கொள்ளும். நமது வீடுகளில் வளரும் அலங்காரச் செடிகளைக் கூட உண்டுவிடும். ஆனால், அணில்கள் மான்களைப் போல இருந்தால் குளிர்காலத்தில் பசியினால் இறந்துவிடும். அவைகள் உயிர் வாழத் தேவையான உணவை அவைகளால் கண்டுபிடிக்க இயலாது.

மான்களும், அணில்களும், தேவன் நம்மீது கொண்டுள்ள கரிசனையைப் பற்றிக் கூறுகின்றன. நமது எதிர்காலத் தேவைகளைச் சந்திக்கத்தக்கதாக நாம் வேலை  செய்து சேமிக்க தேவன் கிருபை அளிக்கிறார். நமக்குத் தேவையான பொருளாதார வசதிகள் குறையும்பொழுது, தேவன் அவற்றை சந்திக்க வழி வகுக்கிறார். ஞானத்தை போதிக்கும் புத்தகமாகிய நீதிமொழிகள் தேவைகள் ஏற்படக் கூடிய பருவக்காலங்களை சந்திக்க திரளாக விளையக் கூடிய காலங்களை தேவன் கட்டளையிடுகிறார் (நீதி. 12:11). சங்கீதம் 23 கூறுவதுபோல ஆபத்துக்கள் நிறைந்த வழியாக செழிப்பான புல்லுள்ள வெளிகளுக்கு தேவன் நம்மை நடத்துகிறார்.

நமது தேவைகளைச் சந்திக்க தேவன் வைத்துள்ள மற்றுமொறு வழி, அதிகம் உள்ளவர்கள், தேவையில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று தேவன் போதிக்கிறார் (உபா. 24:19) ஆகவே நமது தேவைகளைக் குறித்து வேதாகமம் இப்படியாகக் கூறுகிறது. நம்மால் முடிந்த நேரத்தில் வேலை செய்ய வேண்டும் சேர்த்து வைக்க வேண்டியதை சேர்த்து வைக்க வேண்டும். நமக்குள்ளதை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நமது தேவைகளைக் தேவன் நிச்சயமாகச் சந்திப்பார் என்று தேவன் மேல் நம்பிக்கையாக இருக்க வேண்டும்