எனக்கும் என் இளைய சகோதரனுக்கும் ஒரு வயதிற்குள்ளாகத்தான் இடைவெளி இருந்தது. ஆனால், நாங்கள் வளரும் பொழுது இருவருக்கும் இடையே கடுமையான போட்டி (சண்டை) இருந்தபடியினால், எங்களது தகப்பனார் நிலையை நன்கு புரிந்துகொண்டார். ஆனால், எனது தயார் எங்களைப் பற்றி அவ்வளவாக புரிந்து கொள்ளவில்லை. ஏனென்றால் தகப்பனாருக்கு சகோதரர்கள் இருந்தார்கள், தாய்க்கு இல்லை.

உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையே போராட்டம் என்ற தலைப்பின் கீழே ஆதியாகமத்தில் உள்ள நிகழ்ச்சிகளோடு எங்களது கதை ஒத்துப்போவதாக இருந்தது. காயீன், ஆபேல் (ஆதி. 4). ஈசாக்கு, இஸ்மவேல் (ஆதி. 21:8-10 பென்யமீனைத் தவிர யோசேப்பும் அவனது மற்ற சகோதரர்களில் உறவு (ஆதி. 37). ஆனால், சகோதரனுக்கு சகோதரர் இடையே இருந்த கடுமையான பகைக்கு ஏசா, யாக்கோபு சிறந்த உதாரணம்.

ஏசாவின் இரட்டைச் சகோதரனான யாக்போபு, ஏசாவை இருமுறை ஏமாற்றி விட்டான். ஆகவே, ஏசா யாக்கோபைக் கொல்லத் தீர்மானித்தான் (ஆதி. 27:41) அநேக ஆண்டுகளுக்குப் பின் ஏசாவும், யாக்கோபும் சமரசமானார்கள் (ஆதி. 33). ஆனால், அவர்களுக்கு இடையே இருந்தபோட்டி மனப்பான்மை, அவர்களது பின் சந்ததியாரிடமும் பரவி ஏதோம், இஸ்ரவேல் என்ற இரு பகைமை நாடானார்கள். இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் பிரவேசிக்க ஆயத்தமான பொழுது, ஏதோமியர் ஒரு சேனையோடு வந்து அவர்களுக்கு எதிர்த்து நின்றார்கள் (எண். 20:14-21). அநேக காலம் கழித்து, எருசலேம் குடிகள் அவர்களுக்கு எதிராக வந்த படைக்கு பயந்து ஓடினபொழுது ஏதோமியர் அவர்களைக் கொன்று குவித்தார்கள் (ஒபதி. 1:10-14).

வேதாகமம் நமது உடைந்துபோன நிலைமைகளைப் பற்றி மட்டும் கூறாமல், தேவனுடைய மீட்பின் செய்தியைப் பற்றியும் கூறுவது நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன் (யோவா. 13:34) என்று இயேசு தமது சீடர்களிடம் கூறி, அனைத்தையும் மாற்றியமைத்துவிட்டார். அதன் மூலம் அவர் நமக்காக மரிப்பதின் அர்த்தத்தை நமக்கு விளக்கிக் காண்பித்துள்ளார்.

நானும் என் சகோதரனும் வளர்ந்த பின்பு, நாங்கள் ஒருவரையொருவர் அதிகம் நேசிப்பவர்களானோம். அதுதான் தேவனுடைய செயல். அவர் அருளும் மன்னிப்பை நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுது, அவரது கிருபை, சகோதரர்கள் மத்தியில் உள்ள பகைமையை சகோதர சிநேகமாக மாற்றிவிடும்.