பழங்காலத்தைச் சேர்ந்த மண்ணினாலான ஒரு முத்திரை எருசலேமிலுள்ள ஓர் அகழ்வாராய்ச்சி நிலையத்திலிருந்த ஓர் அலமாரிக்குள் ஐந்து ஆண்டுகளாக இருந்தது. பழைய எருசலேமின் தென்பக்கச் சுவரின் அடிப்பகுதியில் தோண்டப்பட்ட பொழுது அந்த முத்திரை கிடைத்தது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான அந்த முத்திரையின் முக்கியத்துவத்தை ஆரம்பகால ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. அந்த முத்திரையில் இருந்த எழுத்துக்களை இக்கால ஆராய்ச்சியாளர்கள் மிகவும் கவனத்துடன் ஆராய்ந்தபொழுது அது மிக மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இருந்தது. அதில் “யூதா தேசத்து ராஜாவாகிய ஆகாசின் மகனாகிய எசேக்கியாவிற்கு சொந்தமானது” என்று ஆதிகாலத்து எபிரேய மொழியில் எழுதப்பட்டிருந்தது.

அந்த முத்திரையின் மையத்தில் இரட்டைச் சிறகுகளையுடைய சூரியன் காணப்பட்டது. அதைச் சுற்றிலும் உயிர்துடிப்பை காண்பிக்கும் இரு உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த முத்திரையை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் எசேக்கியா உயிருக்கு ஆபத்தான வியாதிப்பட்டு இருந்தபொழுது, தேவன் அவனை காப்பாற்றினதை குறிப்பதற்காக (ஏசா. 38:1-8). அந்த முத்திரையை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார் என்று நம்புகிறார்கள். எசேக்கியா அவனை குணமாக்கும்படி தேவனிடத்தில் கெஞ்சினான். தேவன் அவனது விண்ணப்பத்தை கேட்டார். அவர் வாக்குப் பண்ணினதை நிறைவேற்றப் போவதற்கான ஓர் அடையாளத்தையும் காண்பிப்பதாகக் கூறினார். “சூரிய கடியாரத்தில் பத்துப்பாகை பின்னிட்டு திருப்புவேன்” என்றார் (ஏசா. 38:8).

அகழ்வாராட்ச்சியில் கிடைத்த இந்த கலைப் பொருளின் மூலம், நமது துன்பத்தில் நாம் தேவனை நோக்கி கதறும்பொழுது, அவர் நமது விண்ணப்பத்தைக் கேட்டு நமக்கு உதவி செய்கிறார் என்பதற்கு வேதாகமத்தில் காணப்படும் அநேக நபர்கள் நமக்கு உதாரணமாக இருந்து நம்மை ஊக்கப்படுத்துகிறார்கள். அவரது பதில் நாம் எதிர்பார்த்த பதிலாக இல்லாவிட்டாலும், அவர் இரக்கமுள்ளவரென்றும், வல்லமையுள்ளவரென்றும் நாம் நிச்சயமாக நம்பலாம். சூரியனின் அசைவை கட்டுப்படுத்தும் தேவன் நிச்சயமாக நமது இருதயங்களில் செயல்படுவார்.