பத்து வயதாக இருந்த கிளியோவிற்கு மீன் பிடித்தலில் அன்று முதல் அனுபவமாக இருந்தது. ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த புழு இரையை அவன் பார்த்தபொழுது, மீன் பிடித்தலை ஆரம்பிக்க அவன் தயங்கினான். இறுதியில் அவன் எனது கணவனிடம் “எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினான். அந்த வார்த்தைகளுக்கு அர்த்தத்தை எனது கணவன் அவனிடம் கேட்ட பொழுது “புழுக்களைக் கண்டால் எனக்கு பயமாக உள்ளது.” அவனது பயம் அவனை செயல்பட விடாமல் தடுத்துவிட்டது.
வயது முதிர்ந்தவர்களையும் பயம் செயல்பட இயலாமல் தடுத்துவிடும். கிதியோன் அவனது எதிராளிகளாகிய மீதியானியருக்குப் பயந்து ஆலைக்கு சமீபமாக கோதுமையை போரடித்துக் கொண்டிருந்த பொழுது, கர்த்தருடைய தூதனானவர் அவனுக்கு தரிசனமான பொழுது அவனும் பயந்திருப்பான் (நியா. 6:11). அவனது ஜனங்களை யுத்தத்தில் தலைமை தாங்கி நடத்த அவனை தேவன் தெரிந்தெடுத்துள்ளார் என்று கர்த்தருடைய தூதன் அவனிடம் கூறினான் (வச. 12-14).
அதற்கு கிதியோனின் மறுமொழி என்ன? “ஆ என் ஆண்டவரே நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன். இதோ மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது. என் தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன்” (வச. 15) என்று கூறினான். கர்த்தர் அவனோடு இருப்பதாக வாக்குத்தத்தம் பண்ணின பின்பும் கிதியோன் பயந்து இஸ்ரவேல் மக்களை மீட்க தேவன் அவனை பயன்படுத்துவதாக இருந்தால் ஓர் அடையாளத்தை அவனுக்கு காண்பிக்க வேண்டுமென்று கேட்டான் (வச. 36-40). தேவன் அவனது விண்ணப்பத்திற்கு செவிகொடுத்தார். இஸ்ரவேல் மக்கள் யுத்தத்தில் வெற்றி அடைந்தார்கள். நாற்பது ஆண்டுகள் கிதியோன் சமாதானமாக ஆட்சிசெய்தான்.
நம் அனைவருக்கும் பல்வேறு வகையான பயங்கள் உண்டு. புழு முதல் யுத்தம் வரைக்கும் பயம் உண்டு. எதாவது ஒரு காரியத்தை செயல்பட வேண்டுமென்று தேவன் நம்மிடத்தில் கேட்டால், நிச்சயமாக அக்காரியத்தை செய்வதற்கான பெலத்தையும் வல்லமையும் கொடுப்பாரென்று கிதியோனின் சரித்திரம் நமக்கு ஒரு நிச்சயத்தை கொடுக்கிறது.
வாழ்க்கையிலிருந்து பயத்தை எடுத்துப் போட, உங்கள் நம்பிக்கையை தேவன் மேல் வையுங்கள்.