ஒரு சிறு குழுவை எங்களது வீட்டில் வைத்து உபசரிக்க வேண்டுமென்று என் கணவரிடமும் என்னிடமும் கேட்ட பொழுது உடனே அதை மறுத்துவிட நினைத்தேன். அவர்களை உபசரிக்கும் அளவிற்கு எனக்கு வசதிகள் இல்லை. எங்களது வீடு மிகச் சிறியது. அதிக ஆட்கள் அதில் தங்க இயலாது. அனைவருக்கும் போதுமான இருக்கைகள் கூட இல்லை. அவர்களோடு உரையாடலில் ஈடுபடுமளவிற்கு எங்களிடம் திறமைகளும் இல்லை. அச்சிறிய குழுவிற்கு தேவையான உணவை தயாரித்து தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டால், அதற்காக செயல்படும் திறமையோ பணவசதியோ என்னிடம் இல்லை. அவர்களை பராமரிக்க என்னிடம் போதுமான வசதிகள் இல்லை. ஆனால், தேவனுக்கும் இந்த சமுதாயத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆவல் உண்டு. ஆகவே எங்களது பயங்களை புறம்பே தள்ளிவிட்டு அச்சிறு குழுவை பராமரிக்க ஒத்துக் கொண்டோம். அச்சிறு குழுவை எங்களது வரவேற்பரையில் ஏற்றுக் கொண்டது, கடந்த ஐந்து அண்டுகளாக, மகிழ்ச்சியைத் தந்தது..

தேவனுடைய மனுஷனான எலிசாவிற்கு, அப்பங்களை கொண்டுவந்த மனிதனுக்கும் இதைப் போலவே தயக்கமும் சந்தேகமும் இருந்தது. அந்த மனிதன் கொண்டு வந்த அப்பத்தை மனிதர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும்படி எலிசா கூறினான். அவனது பணிவிடைக்காரனோ அந்த இருபது அப்பங்களை எப்படி நூறு பேருக்கு கொடுக்க முடியும் என்று கேட்டான். மனிதர்கள் எண்ணத்தின்படி அந்த இருபது அப்பங்கள் நூறு பேரை போஷிக்க போதுமானதாக இருக்காது என்று எண்ணி அவற்றை மனிதர்கள் முன்பு வைக்க வேண்டாமென்று எண்ணினான். ஆனால், அந்த அப்பங்கள் அவர்களது தேவைக்கு அதிகமாக இருந்தது (2 இரா. 4:44). ஏனென்றால் அந்த மனிதன் கீழ்ப்படிந்து கொடுத்ததினால் தேவன் அவற்றை அளவிற்கு அதிகமாக ஆசீர்வதித்து தேவைகளை சந்தித்தார்.

நாம் தகுதியற்றவர்களன்றோ கொடுப்பதற்கு நம்மிடம் போதுமானது இல்லை என்று எண்ணும்பொழுதோ, நம்மிடம் உள்ளது எதுவோ அதை விசுவாசத்துடன் கூடிய கீழ்ப்படிதலோடு தேவனிடம் கொடுக்க வேண்டுமென்று அவர் நம்மிடம் கேட்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேவனே அனைத்தையும் போதுமானதாக மாற்றுகிறவர்.