நான் என் பணிக்கு செல்லும் வழியில் “அன்பான இளம் வயதிளான நான்” என்ற பாடலைக் கேட்டேன். நீ கடந்த காலத்திற்கு செல்ல முடிந்தால் இப்பொழுது நீ அறிந்திருக்கும் காரியங்களைக் குறித்து அப்பொழுது இளமையாக இருந்த உன்னிடம் நீ என்ன சொல்லுவாய்? நான் அந்த பாடலை கவனித்து கேட்ட பொழுது, ஞானத்தைப் பற்றியும், எச்சரிக்கைப் பற்றியும் சில கருத்துகளைக் கூறியிருக்கலாம் என்று எனக்குள் எண்ணினேன். நமது வாழ்க்கையின் எதாவது சில சமயங்களில், கடந்த காலத்தில் நாம் செய்த காரியங்களை இப்பொழுது செய்ய நேரிட்டால் வேறுவிதத்தில் சிறப்பாக செயல்பட்டிருப்போமே என்று எண்ணியிருப்போம்.

ஆனால், நான் கேட்ட அந்தப் பாடல் நமது கடந்தகால வாழ்க்கை, நம்மை மனவருத்தத்தால் நிரப்பியிருந்தாலும், நாம் அவற்றின் மூலம் பெற்ற அனுபங்கள் நம்மை இன்றுவரை உருவாக்கியுள்ளன என்று விளக்குகிறது. நமது பாவம் அல்லது நமது தேர்ந்தெடுப்புகளால் ஏற்பட்ட விளைவுகளை நம்மால் மாற்றியமைக்க முடியாது. கர்த்தருக்கு தோத்திரம்.

நாம் நமது பயங்கரமான மன பாரங்களையும், கடந்த கால தவறுகளையும் சுமந்துதிரிய வேண்டாம். ஏனென்றால் “ஜீவனுள்ள நம்பிக்கை உன்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” 1 பேது. 1:4ல் கூறப்பட்டபடி இயேசு நமக்கு செய்துள்ளார்.

நாம் நமது பாவத்தைக் குறித்த மன வருத்தத்தோடும், விசுவாசத்தோடும் அவரிடம் திரும்பினால் அவர் நம்மை மன்னிப்பார். அந்த நாளிலே நாம் புத்தம் புதிய வாழ்க்கையைப் பெற்று ஆவிக்கேற்றபடி மன மாற்றம் அடைவோம் (2 கொரி. 5:19). நாம் செய்த காரியங்களாலோ அல்லது செய்யாத செயல்களினால் அல்லாமல் கர்த்தராகிய இயேசு நமக்காக செய்து முடித்த காரியத்தினாலேயே நமது பாவங்கள் நமக்கு மன்னிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாளை நாம் பயனுள்ள முறையில் பயன்படுத்தி அவரோடு கூட இணைந்து எதிர்காலத்தை சந்திப்போம். கிறிஸ்துவுக்குள் நாம் விடுதலை பெற்றவர்களாக இருக்கிறோம்.