பெட்டியின் மகள் அவளது கடற்;பயணத்தை முடித்துவிட்டு உடல் நலமில்லாமல் வீடு திரும்பினாள். தூங்க முடியாத அளவிற்கு அவளது வலி அதிகரித்தபொழது பெட்டியும் அவளது கணவரும் அவளை அவசர மருத்துவ அறைக்கு கூட்டிச்சென்றார்கள். மருத்துவர்களும், செவிலியர்களும் உடனே அவளுக்கு சிகிச்சை மேற்கொண்டனர். சில மணிநேரம் கழித்து ஒரு தாதி பெட்டியிடம் வந்து “உங்கள் மகள் சுகமடையப் போகிறாள். அவள் சுகமாவதற்காக நாங்கள் அதிக கவனம் செலுத்தப் போகிறோம்” என்றாள். அந்த நிமிடத்தில் பெட்டியின் உள்ளம் சமாதானம் அடைந்து அன்பினால் நிரப்பப்பட்டாள். அவள் அவளது மகளைக் குறித்து கரிசனையோடு கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது, தேவன்தாமே அவரது பிள்ளைகளை பேணிப்பாதுகாக்கும் தலை சிறந்த பெற்றோராக இருந்து, துக்கமான நேரங்களில் நமக்கு ஆறுதல் தருகிறார்.

உபாகமம் புத்தகத்தில் தேவன் அவருடைய ஜனங்கள் வனாந்திரத்தில் சுற்றி அலைந்த பொழுது, தன் குஞ்சுகள் மேல் அசைவாடி காக்கும் கழுகைப்போல அவர் காத்து வந்ததை அவருடைய மக்களுக்கு நினைப்பூட்டினார். அவர் அவர்களை விட்டு ஒருக்காலும் விலகவே இல்லை. “கழுகு தன் குஞ்சுகளின் மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்துகொண்டு போகும் கழுகைப் போல” உபாகமம் 32:11 தேவன் அவர்களை விட்டு ஒருக்காலும் விலகவே இல்லை. வனாந்தரத்தில் அவர்கள் கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வந்தாலும், தேவன் அவர்களை கைவிடவில்லை என்பதை அவர்கள் நினைவு கூரும்படி தேவன் விரும்பினார்.

நாமும் நமது வாழ்க்கையில் பலவிதமான சவால்களை சந்திக்கலாம். ஆனால், தேவன் நம்மை விட்டு ஒருக்காலும் விலகவில்லை என்பதை நினைவு கூர்ந்து தைரியமும், ஆறுதலும் அடையலாம். நாம் கீழேவிழுவதாக நினைக்கும்பொழுது தேவன்> ஒரு கழுகு அதன் செட்டைகளை விரித்து அதன் குஞ்சுகளைக் காப்பாற்றுவது போல, (வச. 11) நம்மைக் காப்பாற்றி சமாதானம் தருகிறார்.