பிரபலமான ஒரு குழந்தைகளின் கதைப் புத்தகம், ராஜாவைக் கனம்பண்ணி தன் தொப்பியைக் கழற்றின ஒரு ஏழை கிராமத்துப் பையன் பர்த்தொலொமேயுவின் கதையைக் கூறுகிறது. அவன் தொப்பியைக் கழற்றியவுடன் அவன் தலையில் இன்னொரு தொப்பி வந்தது, ராஜா தன்னை இந்தப்பையன் அவமதித்தாக நினைத்துக் கோபப்பட்டான். அவனை அரமனைக்குக் கொண்டுசெல்லும்பொழுது அவன் தலையிலிருந்து எடுக்க எடுக்க இன்னொரு தொப்பி வந்துகொண்டேயிருந்தது. ஒவ்வொரு தொப்பியும் விலையேறப்பெற்ற கற்கள் பதிந்து இன்னும் அழகாக இருந்தது. 500வது தொப்பி ராஜா டெர்வினுக்கே பொறாமையூட்டுவதாய், வைரங்களாலும் அழகிய இறகுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ராஜா பர்த்தலோமேயுவை மன்னித்து அந்த தொப்பியை 500 பொற்காசுகளுக்கு வாங்கினான். பர்த்தலோமேயுக்கு இப்பொழுது தொப்பியில்லை. ஆனால், 500 பொற்காசுகளுடன் சுதந்திரமாக வீட்டிற்குச் சென்றான்.

கடன்கொடுத்தவன் தன் பிள்ளைகளைப் பிடித்துக்கொள்ளப் போகிறானென்று, ஒரு விதவை எலிசாவிடம் ஓடி வந்தாள். அவளிடம் ஒரு குடம் என்ணெய் மாத்திரமே இருந்தது. ஆனால், அண்டை வீட்டுக்காரரிடத்தில் இரவல் வாங்கின பாத்;திரங்களையெல்லாம் தேவன் எண்ணெய்யால் நிரப்பினார். அவள் அதை விற்று, கடனை அடைத்து மீந்ததை வீட்டுச்செலவிற்கும் வைத்துக்கொண்டாள் (4:7).

தேவன் எப்படி எனக்கு இரட்சிப்பை இலவசமாய்க் கொடுத்தாரோ அப்படியே அந்த விதவைக்கும் பொருளாதார விடுதலை கொடுத்தார். நான் பாவத்தினின்று விடுபடுவதற்கான கிரயம் செலுத்தமுடியாமல் இருந்தேன். இயேசு அந்தக் கிரயத்தைச் செலுத்தி என்னை விடுவித்ததுமல்லாமல், நித்திய ஜீவனையும் எனக்களித்தார். எப்படி பர்த்தலோமேயு ராஜாவை அவமதித்ததற்கான கிரயத்தை செலுத்த முடியாதிருந்தாதானோ, அப்படியே நாமும் இருந்தோம். தேவனோ அற்புதமாய் கிரயம் செலுத்தி நம்மை மீட்டார். அவரை நம்புகிற ஒவ்வொருவருக்கும் தேவன் பரிபூரண ஜீவனைத்தருகிறார்.