மாசாசூசெட்டிலுள்ள பாஸ்டன் பல்கலை கழகத்தில் முதுகலைப்பட்டப்படிப்பிற்காக என் சகோதரியின் மகள் புறப்பட்டாள். அவளுக்கு பிரியாவிடை கொடுக்கும்பொழுது என் தொண்டை அடைத்துக்கொண்டது. இரண்டரை மணி நேரப் பிரயாண தூரத்திலுள்ள ஒரு கல்லூரியில் தனது நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருந்தாள். எங்கள் மாநிலத்திற்கு வெளியே செல்லாததினாலும், அடிக்கடி சந்திக்க வாய்ப்பிருந்ததினாலும் பிரிவு அவ்வளவு துக்கமாயில்லை. ஆனால் இப்பொழுதோ 1280 கிமீ அப்பால் செல்வதால் அடிக்கடி சந்திக்க வாய்ப்பில்லை. தேவன் அவளைப் பாதுகாத்துக்கொள்வார். என்றுதான் நம்ப வேண்டும்.

எபேசு சபை மூப்பர்களிடமிருந்து விடைபெறும்போது, பகுலுக்கும் இதே துக்க உணர்வுதான் இருந்திருக்கும். மூன்று வருடமாய் இந்த சபையினருக்குப்போதித்து சபையைக் கட்டியதால், எபேசு சபையினரும் மூப்பர்களும் பவுலின் குடும்பத்தினராகிவிட்டனர். பவுல் எருசசேமுக்குப் போவதால் இனி அவர்களைக் காணமாட்டான்.

பவுல் இனி அவர்களுக்குப் போதகராயிருக்கப்போவதில்லை என்றாலும் எபேசியர் கைவிடப்பட்டதாக நினைக்க வேண்டாமென்றும், தேவன் தமது கிருபையுள்ள வசனத்தால் (அப். 20:32) அவர்களைப் போதித்து சபையை நடத்தப் பயிற்றுவிப்பார் என்று பவுல் அவர்களுக்கு ஆலோசனை கூறினான். பவுல் கடந்து போய்விட்டான். ஆனால், தேவனோ என்றென்றும் அவர்களோடிருப்பார்.

பறவைகளைப்போல பிள்ளைகள் வீட்டைவிட்டு சென்றாலும், பழகின குடும்பங்களோ நண்பர்களோ பிரிந்து செல்லும் பொழுது வருத்தமாகத்தானிருக்கும். அவர்கள் நம்மைவிட்டு புது வாழ்வமைக்க சென்றுவிட்டனர். நாம் அவர்கள் கையைக் குலுக்கி விடும்பொழுது, தேவன் அவர்களைத் தமது கைகளில் பிடித்துக் கொண்டார் என்று நம்புவோம். அவர் அவர்கள் தேவைகளைச் சந்தித்து அவர்களது வாழ்வை வடிவமைப்பார். இதை நாம் ஒருபோதும் செய்ய முடியாது.