எனது உடல் நலக் குறைவினால் நான் நடக்க முடியாமல் தடைபட்டபோது, நான் எனது எழுத்தின் மூலம் தேவனை ஆராதிக்கவும், அவருக்குப் பணிசெய்யவும் முற்பட்டேன். ஆனால், எனக்கு அறிமுகமான ஒருவர் எனது எழுத்துக்களில் ஒரு பலனையும் தான் காணவில்லை என்று கூறியபோது நான் மிகவும் மனச் சோர்வுற்றேன். நான் தேவனுக்குக் கொடுக்கும் ஒரு சிறிய காணிக்கையின் முக்கியத்துவத்தை நான் உணராதிருந்தேன்.

நாம்  தேவனை ஆராதிப்பதின் நோக்கத்தையும் நாம் அவருக்குக் கொடுக்கும் நம் ஊழியத்தின் மதிப்பையும் அவரே நீர்ணயிக்க முடியும் என்பதனை, ஜெபத்தின் மூலமாயும், வேத வார்த்தைகளைக் கற்றுக் கொண்டதன் மூலமாயும் என் கணவன், உறவினர்கள், நண்பர்களின்  ஊக்கத்தாலும், உறுதியாகத் தெரிந்து கொண்டேன். மற்ற மக்களின் கருத்துகள் இதனைத் தீர்மானிக்க முடியாது. எனக்குத் திறமைகளைத் தந்த என் தேவனிடம் தொடர்ந்து என் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுமாறும், அவர் தருகின்ற வரங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நல்ல வாய்ப்புகளையும் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.

இயேசுவுக்குக் கொடுப்பதில் நாம் வைத்துள்ள தரத்திற்கு அவர் முற்றிலும் மாறுபட்டவர் (மாற். 14:41-44). ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியினுள் ஐசுரியவான்கள் அதிகமாகப் போட்டார்கள். ஒரு ஏழை விதவை சில காசுகளைப் போட்டாள். “அதன் மதிப்;பு மிகக்குறைவு” (வச. 42). அவளுடைய பங்களிப்பு சுற்றியிருந்தவர்களுக்கு முக்கியமற்றதாக இருந்த போதும் (வச. 44), காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரையும் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய் போட்டாள் என தேவன் வெளிப்படுத்துகின்றார் (வச. 43).

ஒருவேளை இந்த விதவையின் கதையில் பொருளாதார கொடையைக் குறித்துக் சொல்லியிருந்தாலும் நாம் அவருக்குக் கொடுக்கும் ஒவ்வொரு செயலும் அவரை ஆராதிக்கும் ஒரு வெளிப்பாட்டையும், அன்பின் கீழ்படிதலையும் குறிக்கும். அவர் நமக்கு ஏற்கனவே தந்து விட்டிருக்கிற தாலந்துகளை மனப்பூர்வமாக, தாராளமனதுடன், தியாகத்தோடு அவருக்குக் கொடுப்பதே அந்த விதவையைப் போன்று நாமும் தேவனை கனப்படுத்துவதாகும். நமது சிறந்த நேரத்தை, தாலந்துகளை அல்லது காணிக்கையை இருதயத்தின் அன்பினால் தேவனுக்குக் கொடுக்கும் போது விலையேறப் பெற்ற காணிக்கைகளால் நாம் அவரைப் போற்றுகின்றோம்.