Archives: ஆகஸ்ட் 2017

அறுவடைக்குத் தயாராக உள்ளது!

கோடை கால முடிவில் இங்கிலாந்தின் நியூ ஃபாரெஸ்ட் பகுதியில் நடந்து சென்றோம். காட்டில் வளர்ந்திருந்த கருப்பு பெர்ரி பழங்களை பிடுங்கிக்கொண்டே பக்கத்தில் துள்ளிக் குதித்த குதிரைகளை ரசித்தவாறு நடந்தோம். பல ஆண்டுகளுக்கு முன்பாக மற்றவர்களால் பயிரிடப்பட்ட திரளான இனிய கனிகளை நான் சுவைத்தபோது, இயேசுவானவர் தமது சீஷருக்குச் சொன்ன வார்த்தைகளை நினைத்தேன், “நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன் (யோவா. 4:38).

இவ்வசனங்கள் பிரதிபலிக்கும் தேவ இராஜியத்தின் தாராளத் தன்மையை நான் நேசிக்கிறேன். மற்றவரது கடின உழைப்பின் பலனை நாம் அனுபவிக்க தேவன் நம்மை அனுமதிக்கிறார். இது, இரட்சிக்கப்படாத ஒருத்தியின் பெற்றோர் உறவினர் அவளது இரட்சிப்பிற்காய் பல ஆண்டுகள் ஜெபித்திருக்க, நாம் சென்று அவளுடன் இயேசுவின் அன்பைப் பகிர்ந்து அவளை இரட்சிப்பிற்குள்ளாய் நடத்துவதைப் போன்றது. இயேசுவானவரின் வார்த்தைகளில் பொதிந்துள்ள எல்லை கட்டுப்பாட்டையும் நான் நேசிக்கிறேன். நாம் ஒருபோதும் பலனை அனுபவிக்க முடியாதென்றாலும், நாம் விதைகளை விதைக்கலாம், இன்னொருவர் அதை அறுவடை செய்யலாம். ஆனபடியால், பலன்களுக்கு நாம்தான் காரணமென பெருமையாய் நினைக்காமல் நம் முன் உள்ள வேலைகளைச் செய்வதில் நாம் மும்முரமாய் ஈடுபடலாம். தேவனுடைய பணி நம்மை நம்பி நடப்பதன்று. ஒரு மகத்தான அறுவடைக்கான எல்லா ஆதாரங்களையும் தேவன் வைத்திருக்கிறார். அதில் ஒரு பங்காக நாம் மாறுவது நமது பாக்கியமாகும்.

எந்த வயல்கள் அறுவடைக்கு ஆயத்தமாகி உங்கள் முன் இருக்கின்றன? எனக்கு முன் இருக்கின்றன? இயேசுவின் அன்பான அறிவுரையை நாம் கேட்போமாக: “இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்தும் பாருங்கள்” (யோவா. 4:35).

அமைதியாயிருங்கள்!

“இதற்கு முன் மனித வரலாற்றில் செய்யப்பட்டதைக் காட்டிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக தகவல்களை நாம் உருவாக்கியிருக்கிறோம். அது நமக்கு முன் எப்போதும் வந்து கொண்டிருக்கிறது” (Organized Mind: தகவல்கள் மிகுந்த சகாப்தத்தில் சரியாக யோசித்தல்’ புத்தக ஆசிரியர் டேனியல் லெவிடின்) லெவிடின் கூறுகிறார், “ மிக அதிகமான புறத்தூண்டுதலுக்கு அடிமைப்பட்டவர்களாக நாம் மாறிவிட்டிருக்கிறோம்” தொடர்சியாக வந்து விழும் செய்திகளும், தகவல் அறிவும் நமது மணங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடும். ஊடகங்களின் தாக்குதல் நிறைந்த இக் காலச் சூழலில், அமைதியாயிருப்பதும் சிந்திப்பதும் ஜெபிப்பதும் மிகவும் சிரமமாக வருகிறது.

சங்கீதம் 46:10 கூறுகிறது, “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” ஆண்டவர் மீது கண்ணோட்டத்தைக் காக்க வேண்டியதன் அவசியத்தை இவ்வசனம் நமக்கு நினைவுபடுத்துகிறது. “அமைதிவேளை” என்பது வேதத்தை வாசிக்கவும் ஜெபிக்கவும், தேவனுடைய மகத்துவத்தை எண்ணிப் பார்க்கவும் மிகவும் இன்றியமையாதது என்பதை பலரும் உணர ஆரம்பித்துள்ளனர்.

சங்கீதக்காரனைப் போல நாமும், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (வச. 1) என்பதை அனுபவிக்கும் போது அது நமது பயத்தைப் புறம்பே தள்ளுகிறது (வச. 2), உலகின் குழப்பத்தை விட்டு தேவ சமாதானத்தை நம்மைப் பார்க்க வைக்கிறது. தேவனுடைய முழு கட்டுப்பாட்டைக் குறித்த ஒரு அமைதியான நம்பிக்கையை நம்மில் உருவாக்குகிறது (வச. 10).

நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு குழப்பம் நிறைந்ததாய் மாறிய போதிலும், நமது பரலோக பிதாவானவரின் அன்பிலும் வல்லமையிலும் நாம் அமைதியையும் பெலத்தையும் கண்டு கொள்ளக் கூடும்.

திருப்பம்!

இராணுவத்தில் திறம்பட பணியாற்றிய ஒரு முதியவரின் அடக்க ஆராதனையில் பிரசங்கித்த போதகர், மரித்தவர் எங்கிருப்பார் என்ற கேள்வியை எழுப்பினார். பின்னர் எப்படி மனிதர்கள் கடவுளை அறியலாமென கூறாமல் வேதாகமத்தில் எங்கும் எழுதப்படாத காரியங்களைக் குறித்து யூகங்களை அறிவித்தார். நம்பிக்கை எங்கே போனது என நான் சிந்திக்கலானேன்.

இறுதியாக முடிவுப் பாடலை பாடும்படி அவர் கூறினார். “ தேவனே நீர் எவ்வளவு பெரியவர்” என்ற பாடலைப் பாட நாங்கள் எழுந்தபோது, தேவனை கூடியிருந்த யாவரும் தங்கள் உள்ளத்திலிருந்து துதிக்க ஆரம்பித்தனர். சில நொடிகளுக்குள், எங்களது அறையின் ஆவிக்குரிய நிலை முற்றிலும் மாறியது. திடீரென ஆச்சரியப்படும் வண்ணம், மூன்றாவது சரணத்தை நான் பாடுகையில் உணர்ச்சிகள் எனது குரலை முற்றிலும் அடக்கிற்று!

                    தேவன் தமது குமாரனை மறைத்துவைக்காமல்

                    மரிக்க அனுப்பியதை நான் எண்ணி துதிக்கிறேன்

                    சிலுவையில் என் பாவத்தை மகிழ்வுடன் சுமந்தார்

                    இரத்தம் சிந்தி என் பாவத்திற்காய் அவர் மரித்தார். (How great Thou art)

அந்தப் பாடலைப் பாடி முடிக்கும் வரையிலும் தேவன் அந்த அடக்க ஆராதனைக்கு வருவாரா, மாட்டாரா என்று சிந்தித்தேன். அவர் ஒருபோதும் விலகிச் செல்லார். எஸ்தர் புத்தகம் இவ்வுண்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது. அந்நிய நாட்டில் வசித்த யூதர்களை பலம் பொருந்திய மக்கள் அழிக்க முயன்றனர். அந்த மிக இருளான வேளையிலும் அடிமைகளாய் வாழ்ந்த இஸ்ரவேலர் தங்களது உரிமையைக் காத்துக்கொள்ள ஒரு தேவனை அறியாத ராஜா அவர்களுக்கு உதவி செய்தான் (எஸ். 8:11-13). வெற்றிகரமாக இஸ்ரவேலர் தங்களைக் காத்துக் கொண்டனர். கொண்டாட்டம் தொடங்கியது (9:17-19).

அடக்க ஆராதனையில் பாடப்பட்ட ஒரு பாடலில் தேவன் வெளிப்பட்டார் என்பது வியப்பான ஒரு காரியமல்ல. ஆண்டவர் ஒரு மனுக்குல அழிவை கொண்டாட்டமாக மாற்றினார், சிலுவையிலறையப்படுவதை உயிர்த்தெழுதலாகவும் இரட்சிப்பாகவும் மாற்றினார்!

துக்கத்திலிருந்து சந்தோஷத்திற்கு!

கெல்லியின் கர்ப்பத்தில் பல சிக்கல்கள். மருத்துவர்கள் மிகவும் பயந்தனர். பிரசவ காலம் நீண்டபோது அவளை அவசரமாக சிசெரியன் பிரசவ முறைக்கு உட்படுத்தினார். எனினும் அந்தக் கஷ்டமான நடை முறையில்கூட தனது மகனைக் கையில் ஏந்திய கெல்லி விரைவில் தனது வேதனையை மறந்துவிட்டாள்.

இவ்வுண்மையை வேதாகமம் ஆமோதிக்கிறது: “ஸ்திரீயானவளுக்கு பிரசவகாலம் வந்திருக்கும் போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளை பெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்” (யோவா. 16:21). மிக சீக்கிரத்தில் தாம் பிரிந்து செல்கையில் அவரது சீஷர்கள் துக்கமடைந்தாலும் அவரைத் திரும்பக் காணும்போது அவர்களது துக்கம் சந்தோஷமாகமாறும் என்பதை வலியுறுத்தவே இயேசுவானவர் இந்த உதாரணத்தைப் பயன்படுத்தினார். (வச. 20-22).

இயேசுவானவர் தமது மரணம் மற்றும் அதனையடுத்த உயிர்த்தெழுதலைக் குறிப்பிட்டுப்பேசினார். அவரது உயிர்த்தெழுதலுக்குப் பின், சீஷர்கள் மகிழும் படி, இயேசுவானவர் 40 நாட்கள் அவர்கள் மத்தியில் சஞ்சரித்து, அவர்களுக்குப் போதனை செய்தார். பின்னர் பரமேறி மறுபடியும் அவர்களைப் பிரந்தார் (அப். 1:3) எனினும் துக்கத்தில் மூழ்கியவர்களாய் அவர் அவர்களை விட்டுச் செல்லவில்லை. பரிசுத்த ஆவினானவர் சந்தோஷத்தால் அவர்களை நிரப்பினார் (யோவா. 16:7-15 அப். 13:52).

நாம் இதுவரை இயேசுவானவரை முகமுகமாய் தரிசிக்கவில்லை என்றாலும், ஒரு நாள் அவரைக் காண்போம் என்னும் உறுதிப்பாடு விசுவாசிகளாகிய நமக்கு உண்டு. அந்நாளில், இப்பூமியில் நாம் எதிர்கொள்ளும் அனைத்துத் துயரங்களும் மறக்கப்பட்டுப்போம் என்றபோதிலும் அதுவரை நம்மை சந்தோஷமற்றவர்களாக விடவில்வை. அவர் தமது ஆவியானவரை நமக்குத் தந்தருளியிருக்கிறார் (ரோம. 15:13; 1 பேது. 1:8-9).