எங்களது மகள் உயர் நிலைப்பள்ளி குழு ஓட்டப்பந்தயக் குழுவில் ஓடும் போது, எங்களது குடும்பத்தினர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பந்தய மைதானத்தில் ஓரத்தில் வரிசையாக நின்று அவளை உற்சாகப்படுத்தி கோஷமிடுவோம். பந்தயத்தின் முடிவு கோட்டைத் தொட்டபின் விளையாட்டு வீரர்கள் கூட்டமாக வெளியே வந்து தங்களது சக வீரர்களையும் பயிற்சியாளர்களையும் பெற்றோரையும் சந்திப்பர். 300-க்கும் மேற்பட்ட கூட்டத்தினர் அவர்களை அப்படியே சூழ்ந்துகொள்வதால், அக் கூட்டத்தில் யாராவது ஒருவரை காண்பது மிகவும் சிரமமானது. நாங்கள் எங்களது மகளை தேடி கண்டுபிடித்து, நாங்கள் காணவிரும்பிய அந்த ஒரே ஒரு வீராங்கனையை உற்சாகமாய் கட்டித் தழுவுவோம். அவள் எங்களது அன்பான மகள்.

பாபிலோனில் 70 ஆண்டுகள் சிறைப்பிடிக்கப்பட்ட பின், தேவன் யூதர்களை எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பப் பண்ணினார். தேவன் அவர்கள் மீது கொண்டிருந்த மகிழ்ச்சியையும், அவர்கள் யாத்திரையாக சொந்த வீட்டிற்குத் திரும்புவதற்காக வழிகளை ஆயத்தம் பண்ணின அவரது கிரியைகளையும் அவர்களை வரவேற்க வாசல்களைத் தேவன் ஆயத்தமாக்கினதையும் ஏசாயா விரிவாக எடுத்துரைக்கிறார். அவர்கள் தமது பரிசுத்த ஜனமென்பதை உறுதிப்படுத்தும் கர்த்தர், அவர்களது பெருமையை புதிய நாமத்தின் மூலம் திரும்பக் கொண்டுவருகிறார். “தேடிக்கொள்ளப்பட்டதென்றும் புதிய நகரமென்றும் பெயர் பெறுவாய்” (62:12). பாபிலோனில் சிதறடிக்கப்பட்ட அவர்கள் அனைவரையும் தேடிச் சேர்த்து, தம்மிடம் திரும்பிய அவர்களை அழைத்துவந்தார்.

இஸ்ரவேல் புத்திரரைப் போலவே, தேவனால் கவனமாகத் தேடப்படும் தேவனுடைய அன்பான பிள்ளைகளாய் நாம் இயேசுவானவரின் தியாகபலி திரும்பவும் நம்மைத் தேவனிடம் கொண்டுசேர்க்கிறது. நம்மை மனதாரத் கட்டித் தழுவும்படி நம் ஒவ்வொருவரையும் கவனமாய்த் தேடும் அவர், அந்தத் தருணத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.