பாதுகாப்பைக் குறித்து நான் யோசிக்கையில், உடனடியாக பறவையின் சிறகுகளை நினைப்பதில்லை. பறவை இறகுகள் பாதுகாப்பை அளிப்பதில் மிகக் கீழானவை போலத் தோன்றினாலும், அது சரியான மதிப்பீடல்ல.
பறவை இறகுகள் தேவனது வடிவமைப்பு திறனுக்கு அற்புதமான ஒரு உதாரணம். பறவை இறகுகளின் மென்மையான ஒரு பாகமும், குஞ்சம் போன்ற ஒரு பாகமும் உள்ளன. மென்மையான பகுதியில் கொக்கி போன்ற பல சிறிய கூர் முனைகள் உள்ளன. குஞ்சம் போன்ற பகுதி பறவை வெப்பமாயிருக்க உதவுகிறது. இவ்விரண்டு பகுதிகளும் காற்று மற்றும் மழையிலிருந்து பறவையைக் காக்கின்றது. ஆனால் பல பறவைக் குஞ்சுகளுக்கு குஞ்சமும், வளர்ச்சியடையாத சிறகுகளும் இருப்பதால், தாய்ப் பறவை கூட்டில் தனது சொந்த சிறகுகளால் அவற்றை மூடி காற்று மற்றும் மழையிலிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது.
சங்கீதம் 91:4லும் மற்ற வேதாகமப் பகுதிகளிலும் தேவன் தமது சிறகுகளால் நம்மை மூடுகிறார் என்பது சுகவாழ்வையும் பாதுகாப்பையும் குறிக்கிறது (சங்கீதம் 17:8). நமது மனதில் தோன்றும் படம், ஒரு தாய்ப் பறவை தன் குஞ்சுகளை சிறகினால் மூடிப் பாதுகாப்பதாகும். பயமுறுத்தும் புயல் மற்றும் கஷ்ட நேரத்தில் பெற்றோர் தங்கள் கரங்களால் பிள்ளைகளை அரவணைத்து ஆறுதல் அளிப்பதைப் போல நமது மனப் புயல்களில் தேவனது ஆறுதலளிக்கும் பிரசன்னம் நமக்கு பாதுகாப்பையும் அரணையும் அளிக்கிறது.
நமது முகங்கள் தேவனை நோக்கியிருக்கையில் என்ன உபத்திரவம் கஷ்டம் வந்தாலும் நாம் அவற்றைப் பயமின்றி எதிர்கொள்ளலாம். அவர் நமது அடைக்கலம் (சங். 91:2,4,9).
பயம் நமது நம்பிக்கையை மறையச் செய்யும்போது, தேவனிடம் விரைந்து செல்.
மூழங்காலில் அவரது அடைக்கலத்தை அடையலாம்.