வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து நாங்கள் காரை எடுக்கையில் வெளியே சைக்கிள் ஓட்டிய ஒரு இளம் பெண்ணுக்காக எனது கணவர் காரை சற்று மெதுவாக ஓட்டினார். எனது கணவர் தனது தலையை அசைத்து அவளை முன்னே போகச் சொன்னபோது, புன்னகைத்த அப்பெண் கைகளை ஆட்டிவிட்டு சைக்கிளில் சென்றால். சற்று நேரத்திற்கு பின்னர் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு காரின் ஓட்டுநர் கதவைத் திறக்க அதில் அடிபட்டு அந்த இளம்பெண் நடைபாதையில் விழுந்தாள். அவளது கால்களில் இரத்தம் கொட்டியது. வேதனையில் துடித்த அவள் நொறுங்கிப்போன தனது சைக்கிளை கவலையுடன் பார்த்தாள்.

பின்பு, அவ்விபத்தைக் குறித்து நாங்கள் யோசிக்கலானோம்… நாங்கள் மட்டும் அவளைக் காக்க வைத்திருந்தால்… அந்த மற்ற காரின் ஓட்டுநர் தனது காரின் கதவைத் திறக்குமுன் கொஞ்சம் வெளியே பார்த்திருந்தால்… வாழ்க்கையில் திடீரென ஏற்படும் சங்கடங்கள் நம்மை இப்படி வேறுவித யோசனைகளுக்குத் தள்ளுகின்றன. மதுப்பழக்கமுடைய இளம் வாலிபப் பிள்ளைகளோடு என் பிள்ளை இருப்பதை நான் ஏற்கனவே அறிந்திருந்தால்… இந்தப் புற்று நோயை இன்னும் சற்று முன்பாகவே நாங்கள் கண்டுபிடித்திருந்தால்…

எதிர்பாராத பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கையில், தேவனது நல்ல குணத்தைக் குறித்து நாம் கேள்விகளைக் கேட்கிறோம். தங்களது சகோதரன் மரித்தபோது மார்த்தாள் மரியாள் அடைந்ததைப் போன்ற துக்கத்தை நாமும் உணரலாம். லாசரு வியாதியாயிருக்கிறானென்று அறிந்த உடனேயே இயேசுவானவர் இங்கு வந்திருந்தாரானால் (1 யோவா. 21,32).

மார்த்தாள் மரியாளைப் போலவே நமக்கு ஏன் கடினமான காரியங்கள் நடக்கின்றன என நமக்குப் புரிவதில்லை. ஆயினும், மிகப்பெரிய நன்மையொன்றை தேவ சித்தம் நிறைவேற்றும் என்னும் நம்பிக்கையில் நாம் அமைதியாய் இருந்துவிடலாம். எந்தச் சூழ்நிலையிலும், அன்பான உண்மையுள்ள ஒரு தேவனின் ஞானத்தை நாம் நம்பலாம்.