எனது தந்தையின் முகத்தை நினைத்துப் பார்க்கிறேன். அவர் முகத்தின் அர்த்தத்தைக் கண்டுகொள்வது சுலபமன்று. அப்பா மிகவும் அன்பானவர் எனினும் அமைதியாய் சுயஅடக்கத்தோடு தோன்றுபவர். சிறுவனாயிருக்கும் பொழுது அவரது முகத்தில் ஒரு புன் முறுவளையோ அல்லது அன்பு நிறைந்த ஒரு பார்வையையோ நான் பல முறை தேடியிருக்கிறேன். நமது முகம் நாம் யாரென்பதைக் காட்டுகிறது. ஒரு கோபம், ஒரு உணர்வற்ற பார்வை, ஒரு புன்சிரிப்பு மற்றும் சுருக்கங்கள் நிறைந்த கண்கள் மற்றவர்களைக் குறித்து நாம் என்ன நினைக்கிறோமென்பதை வெளிப்படுத்துகின்றன. நாம் யார் என்பதை நமது முகங்கள் சொல்லி விடுகின்றன. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.

சங்கீதம் 80-ன் ஆசிரியறான ஆசாப் மிகவும் கவலையடைந்தவனாய் தேவனுடைய முகத்தைக் காண ஆசைப்பட்டான். எருசலேமின் வடக்கே அவன் பார்த்தபோது யூதேயாவின் சகோதர தேசமாகிய இஸ்ரவேல் அசீரிய சாம்ராஜ்யத்தின் சுமையால் நிலைகுலைந்திருப்பதைக் கண்டான். அந்த தேசம் பறிபோன நிலையில், யூதேயாவானது அனைத்து திசையிலிருந்தும் அன்னிய படையெடுப்புக்கு இலக்காயிருந்தது. வடக்கிலிருந்து அசீரியா, தெற்கிலிருந்து எகிப்து, கிழக்கிலிருந்து அரேபிய தேசங்கள். யூதேயா எண்ணிக்கையில் குறைந்தும் பலவீனமாயும் காணப்பட்டது.

தனது பயங்களையெல்லாம் ஜெபமாக ஒருங்கிணைத்த ஆசாப் மூன்று முறை திரும்பத் திரும்ப கூறுகிறான், “உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்” (80:3,7,19). (வேறொரு விதத்தில் சொன்னால், நான் உமது புன்முறுவலைக் காண்பேனாக)

நமது பயங்களை விட்டுவிட்டு, நமது பரலோகப் பிதாவின் முகத்தைத் தேடுவது நல்லது. தேவனின் முகத்தைப் பார்க்கும் மிகச் சிறந்த வழி சிலுவையைப் பார்ப்பதாகும். சிலுவை அவர் யாரென்று நமக்குச் சொல்லிவிடுகிறது (யோவா. 3:11).

இதை அறிந்துகொள்ளுங்கள்: பிதாவானவர் உங்களைப் பார்க்கும்போது அவரது முகத்தில் ஒரு பெரிய புன்சிரிப்பு மிளிர்கிறது. நீங்கள் பாதுகாப்பாய் இருக்கிறீர்கள்.