ஒரு ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் எகிப்திய சிறையில் 400 நாட்கள் அடைக்கப்பட்டு விடுதலையானபோது பலதரப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தினார். தனது விடுதலையை ஏற்றுக்கொள்ளும் அவர் இன்னும் சிறையிலிருக்கும் தமது நண்பர்களைப் பற்றிய ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்தினார். தன்னோடு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட உடன் பத்திரிக்கையாளர்களிடம் ‘போய் வருகிறேன்’ என விடைபெறுவது மிகவும் கடினமாயிருந்ததாகத் தெரிவித்தார். இன்னும் எவ்வளவு காலம் அவர்கள் சிறையில் இருக்கப் போகிறார்களோ என அவர் வருந்தினார்.
நண்பர்களை விட்டு விடைபெறுவது மோசேக்கும் ஒரு பதற்றம் நிறைந்த அனுபவமாயிருந்தது. சீனாய் மலையில் தேவனை சந்திக்கும் நேரத்தில், பொன் கன்றுக்குட்டியைச் செய்து அதை வணங்கிய சகோதரன், சகோதரிகள் மற்றும் தேசத்தாரை இழக்கும் நினைவினால் கலங்கிய மோசே, அவர்களுக்காக தேவனிடம் மன்றாடினான் (மாற். 32:11-14). அவர்கள் மீது தான் கொண்டிருந்த ஆழமான அக்கறையை வெளிப்படுத்தி, “தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருள்வீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப் போடும்” என கெஞ்சினான் (வச. 32).
பிற்காலத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் தனது குடும்பம், நண்பர்கள் மற்றும் தேசத்தாருக்காக இதுபோன்ற ஒரு அக்கறையை வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் மேல் அவர்களுக்கிருந்த அவிசுவாசத்திற்காக துக்கப்படும் அவன், தனது சகோதர சகோதரிகள் இரட்சிப்படையும்படி கிறிஸ்துவுடனான தனது உறவைவயும் விட்டுக்கொடுக்க தான் ஆயத்தமாயிருப்பதாக கூறினான் (ரோம. 9:3).
நாம் திரும்பிப் பார்க்கையில், மோசேயும் பவுலும் கிறிஸ்துவின் இதயத்தை பிரதிபலிப்பதை நாம் காண்கிறோம். இருந்தாலும், மோசேயும் பவுலும் மட்டுமே அந்த அன்பை உணர்ந்தார்கள்; அவர்கள் மட்டுமே அந்த தியாகபலியைச் செலுத்த முடியும். இயேசு அதை ஏற்று நிறைவேற்றினார் என்றென்றும் நம்மோடிருக்க.
பிறருக்காக கரிசனை கொள்வது நம் மீதான கிறிஸ்துவின் அன்பிற்கு கனம் செலுத்துவதாகும்!