2004 ஜூன் மாதத்தில் வேன்கூவரிலுள்ள கலைக் கூடத்தில், கனடாவைச் சேர்ந்த வீரர் பெக்கிஸ்கார்டுக்கு திறந்த வெளிய பனிச் சறுக்கு போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது.
அச்செயல் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. ஏனென்றால் 2002ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி உட்டாவில் நடந்தது. அதில் ஒருவர் தங்கப் பதக்கமும், மற்றொருவர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். ஸ்காட் வெண்கல பதக்கம் வென்றாள். தங்கப்பதக்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற இருவரும் தடைபண்ணப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே அவர்கள் இருவரும் பதக்கப் பட்டியலிருந்து நீக்கப்பட்டார்கள்.
அதன் விளைவாக, பெக்கிஸ்கார்ட் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். ஆனால், ஒலிம்பிக் பதக்கம் அணிவிக்கப்படும் மேடையில் நிற்கும் பொழுது, அவளது தேசத்தின் தேசீய கீதத்தை கேட்கக்கூடிய தருணத்தை அவள் இழந்துவிட்டாள். அவளுக்கு நடந்த அந்த அநீதி சரிசெய்யப்படக் கூடாதாக இருந்தது.
எந்த விதமான அநீதியும் நமக்கு சஞ்சலத்தை அளிக்கிறது. கடினப்பட்டு உழைத்து பெற்ற பதக்கம் மறுக்கப்பட்ட அநீதியைவிட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அநேக தவறுகள் நடை பெறுகின்றன. காயீன், ஆபேல்பற்றிய கதை, அநீதியின் உச்சகட்டத்தை விளக்குகிறது (ஆதி. 4:8). முதல் பார்வையில், காயீன் அவனது சகோதரனை கொலை செய்ததிலிருந்து தப்பிவிட்டதுபோலக் காணப்பட்டது. எப்படியெனில் அவன் நீண்ட ஆயுள் உள்ளவனாக வாழ்ந்து ஒரு பட்டணத்தைக் கூட கட்டினான் (வச. 17).
ஆனால், தேவனோ காயீனுக்கு எதிர்த்து நின்றார். “உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது” என்றார் (வச. 10). பிற்காலத்தில் புதிய ஏற்பாட்டில் பொல்லாங்கானவனான காயீனைப்போல இருக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது (1 யோவா. 3:12; யூதா 11). ஆனால், ஆபேலைக் குறித்தோ “அவன் மரித்தும் இன்னமும்; பேசுகிறான்” என்று (எபி. 11:4) நாம் வாசிக்கிறோம்.
தேவன் நீதியைக் குறித்தும், தவறுகளை திருத்திக் கொள்வதைக் குறித்தும், பெலனற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பது குறித்தும், மிகவும் கரிசனையுடனும், அக்கறையுடனும் இருக்கிறார். அநீதியான செயல் செய்த எவரும் ஒருகாலும் தப்ப இயலாது. அதைப் போலவே தேவனுக்காக நாம் விசுவாசத்துடன் செய்யும் பணிகளுக்குத்தக்கதான பலனை, அவர் நமக்கு அருளாமல் இருக்கமாட்டார்.
நாம் பார்க்கும் வண்ணமாக, பாவம் நியாயம் தீர்க்கப்படாமல்,
தேவன் பார்க்கும் விதமாக நியாயம் தீர்க்கப்படுகிறது.