நான்சி, அவளது கரத்திலிருந்த தேனீர் கோப்பையிலிருந்து தேனீரை மெதுவாக குடித்துக் கொண்டே, அவளது சினேகிதியின் வீட்டிலிருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்து பெருமூச்சு விட்டாள். இளவேனிற் காலத்து மழையினாலும், இதமான சூரிய ஒளியினாலும், ஏற்கனவே அவளது சினேகிதியினால் நன்கு பராமரிக்கப்பட்டிருந்த பூ பாத்திகளில் லில்லி, ப்ளாக்ஸ், ஐரிஸ், பிரிம் ரோஸ் போன்ற பல வண்ணப் பூக்கள் பூத்து குலுங்கின.
“நான் எந்த ஒருவேலையும் செய்யாமல் அந்த அழகிய காட்சியை காண விரும்புகிறேன்”, என்று ஏக்கத்துடன் நான்சி தனக்குள் கூறிக்கொண்டாள்.
சில குறுக்கு வழிகள் நன்றாகவும், எளிதில் செயல்படக் கூடியதாகவும் இருக்கும். வேறு சில குறுக்கு வழிகள் நமது ஆவியை அவித்துப்போட்டு நம்முடைய வாழ்க்கையை அழித்து விடுகின்றன. நம்மை விட முற்றிலும் மாறுபட்ட தன்மையுள்ள மக்களோடு நாம் ஈடுபாடு கொள்ளும் பொழுது எந்தவிதமான இடர்பாடோ கஷ்டங்களோ இன்றி, புத்துணர்ச்சியுடன் அவருடன் பழக வேண்டுமென்று விரும்புகிறோம். உண்மையில் நமது வாழ்க்கையின் ஓட்டத்தில் ஏற்படக் கூடிய ஆபத்தான சூழ்நிலைகளையோ தோல்விகளையோ சந்திக்காமல் உன்னதமான வாழ்க்கை வாழ நாம் விரும்புகிறோம். நாம் தேவனை பிரியப்படுத்த விரும்புகிறோம். ஆனால், நமக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாத சூழ்நிலைகளில்தான் அவ்வாறு விரும்புகிறோம்.
நமது வாழ்க்கையை முற்றிலுமாக இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்க உறுதியான முடிவு எடுக்காமல் எந்த ஒரு குறுக்கு வழியிலும் அவரை அடையமுடியாது என்று இயேசு அவருடைய சீஷர்களுக்கு தெளிவாக கற்பித்தார்.
“கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்று” (லூக். 9:62) ராஜ்ஜியத்தை பெற்றுக் கொள்வது சாத்தியம் என்று எண்ணின ஒரு சீஷனை இயேசு எச்சரித்தார். இயேசுவை பின்பற்றுவதற்கு நமது அடிப்படை நம்பிக்கைகளை முழுவதுமாக மாற்றுவது அவசியமாக உள்ளது.
இயேசுவில் நமது விசுவாசத்தை வைக்கும்பொழுதுதான் விசுவாசம் செயல்பட ஆரம்பிக்கிறது. “என் நிமித்தமாகவும், சுவிசேஷத்தின் நிமித்தமாகவும், வீட்டையாவது…விட்டவன் எவனும் இம்மையிலே துன்பங்களோடே கூட… அடைவதோடு மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான்” (மாற். 10:29-30) என்று கூறினார். இது எவ்வளவு சிறப்பானகாரியம் ஆனால் அவர் அவரது பரிசுத்தாவியை நமக்கு அருளியுள்ளார். ஆதனால் நமக்கு பரிபூரணமான, மகிழ்ச்சியான வாழ்க்கை நித்திய நித்தியமாகக் கிடைக்கிறது.
தகுதியான அநேக செயல்களை செய்வது உண்மையில் கடினமான காரியமாகும்.