சமீபத்தில் நான் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு வீட்டிற்கு எனது அறையை மாற்றினேன். என் அறையை மாற்றும் காரியம், நான் எதிர்பார்த்ததைவிட அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது. ஏனென்றால் எனது பழைய அறையிலிருந்த பழைய குப்பைகளை புதிய அறைக்கு மாற்ற எனக்கு விருப்பமில்லை. எனது புதிய அறையில் எந்தவிதத் தேவையற்ற பொருட்களும்மின்றி முற்றிலும் புதியவற்றையே வைக்க விரும்பினேன். நான் என் அறையிலிருந்த பொருட்களை, பிறருக்கு இலவசமாக கொடுக்கக்கூடியவை, மறு சுழற்சி செய்யக்கூடியவை என பிரிப்பதற்குப் பல மணிநேரம் செலவழித்தேன். வேண்டாத பொருட்களைப் பல பைகளில் சேகரித்து எனது அறை வாசலின் முன் வைத்து விட்டேன். இந்த செயல் என்னை மிகவும் சோர்வடையச் செய்தது. ஆனால், அவ்வேலைகள் முடிந்தபின், எனது புதிய அறை என் நாட்களை மிக மகிழ்ச்சியுடன் கழிக்கத்தக்கதாக மிக அழகான அறையாக மாறியது.

என் வீட்டைச் சுத்தம் செய்த இந்த செயல் 1 பேதுரு 2:1யை வாசித்த பொழுது அதைப்பற்றிய புதிய கண்ணோட்டத்தை எனக்குத் தந்தது. “சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிடுங்கள்’’ (1 பேது. 2:2) என்று நமது கவனத்தை ஈர்க்கத்தக்கதாக மேற்கூறப்பட்ட சுத்தப்படுத்துதல் என்ற நிகழ்ச்சி, கிறிஸ்துவுக்குள் அவர்கள் பெற்ற புதிய ஜீவனை குறித்து அவர்கள் அறிக்கை இட்ட உடன்தான் நிகழ்கிறது (1 பேது. 1:1-12). சகல  துர்க்குணங்களையும் ஒழித்துவிட பேதுரு அவர்களுக்கு அறிவுறுத்துகிறார் (1 பேது. 1:13-2:3). கர்த்தரோடு நாம் இணைந்து வாழும் வாழ்க்கை குறைவுள்ளதாகவும் பிறர் மேலுள்ள நமது அன்பு கறைபடக்கூடியதாகவும் இருப்பதை உணர்ந்தால், நாம் நமது இரட்சிப்பைக் குறித்து கேள்வி கேட்கத் தேவை இல்லை. இரட்சிக்கப்படுவதற்காக நாம் நமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால், நாம் இரட்சிக்கப்பட்டதால்தான் நமது வாழ்க்கை மாறுகிறது (1:23).

கிறிஸ்துவுக்குள்ளாக நமது வாழ்க்கை உண்மையாகவே புதிதாக மாறி இருப்பதுபோலவே, நம்மில் ஏற்கனவே உள்ள துர்க்குணங்கள் ஒரே இரவில் நம்மிடமிருந்து மறைந்து போவதில்லை. ஆகவே, நமது அனுதின வாழ்க்கையில் பிறரை முழுமனதுடன் நேசிப்பதிலிருந்தும் (1:22) ஆன்மீக வாழ்க்கையில் வளர்ச்சி அடைவதிலிருந்தும் (2:2), நம்மைத் தடுக்கும் அனைத்து குணங்களையும், நாம் அன்றாடம் நீக்கி நம்மை சுத்திகரித்துக் கொண்டால் தான் சுத்தமான இருதயத்தை நாம் பெறமுடியும். சுத்தமாக்கப்பட்ட புதிய வாழ்வில் கிறிஸ்துவின் வல்லமையினாலும், அவருடைய ஜீவனாலும் புதிதாக்கப்பட்ட அற்புத நிகழ்ச்சியை நாம் அனுபவிக்கலாம்.