“என்னால் எவரையும் நம்ப முடியாது. ஏனென்றால் நான் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களால் காயப்பட்டு போகிறேன்”, என்று கண்ணீரோடு என் தோழி கூறினாள். அவளுடைய காதலன் அவளுடனான உறவை துண்டித்துக் கொண்ட பிறகு அவளைப்பற்றி தவறான வதந்திகளை பரப்ப ஆரம்பித்தான். இது என்னை மிகவும் கோபமூட்டியது. அவன் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்த என் தோழி, மனமுடைந்து போனாள். துயரமான குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்த அவள், மீண்டுமாக பிறர் மீது நம்பிக்கை  வைக்க போராடிக் கொண்டிருந்தபொழுது, ‘ஒரு மனுஷனையும் நம்ப முடியாது’ என்கிற எண்ணத்தை ஊறுதிப்படுத்துவது போல இத்துரோகம் செய்துவிட்டது.

அவளை ஆறுதல்படுத்துவதற்கு வார்த்தைகள் இன்றி நான் தடுமாறினேன். ஏதேதோ கூறி அவளை ஆறுதல்படுத்த முயன்ற என்னால், ‘நம்பிக்கைகுரியவர்களை காண்பது மிகக்கடினம்’ என்னும் அவளுடைய எண்ணத்தை போக்கமுடியவில்லை. முற்றிலும் நம்பிக்கைக்குரிய அன்பான மக்கள் அநேகர் உண்டென்றும் என்னால் கூறமுடியவில்லை. அவளுடைய இத்துயரமான சம்பவம், என் வாழ்வில், நான் எதிர்கொண்ட துயரமான துரோகத்தை நினைவூட்டியது. வேதாகமம் கூட மனித சுபாவத்தை எவ்வித ஒளிவுமறைவின்றி  வெளிப்படையாக பதிவு செய்துள்ளது. என் தோழியின் புலம்பலைப் போலவே நீதிமொழிகள் புத்தகத்தின் ஆசிரியரும், துரோகத்தின் வலியை நித்திய நினைவுச்சின்னம் போல பதிவுசெய்துள்ளார் (20:6).

நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், பிறருடைய கொடுமைகள் என்பது ஒரு கதையின் ஒரு பகுதிதான். ஏனென்றால் பிறரால் உண்டான காயங்களும் அதின் வலி வேதனைகளும் உண்மையாக இருப்பினும், முழமையான பரிபூரண அன்பு உண்டு என்பதை இயேசு வெளிப்படுத்தி காட்டியுள்ளார். அதுமட்டுமன்றி, அவர் தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, அவர்கள் ஒருவரிலொருவர் வைத்துள்ள அன்பைக் கண்டு இவ்வுலகம் அவர்களை  அவருடைய சீஷர்கள் என்று அறிந்துககொள்வார்கள் என்று கூறினார் (யோவா.13:35), ஆகவே, ஒரு சிலர் நம்மைக் காயப்படுத்தினாலும், நிபந்தனையற்ற ஆதரவும் அக்கறையும் காட்டும் அன்பு நிறைந்த அநேகர் நமக்குண்டு என்பதை நாம் நினைவுகூறவேண்டும். நாமும் அவருடைய பரிபூரண அன்பில் இளைப்பாறி, உள்ளத்திலே சுகமடைந்து, அவர் நம்மை நேசித்தது போலவே தோழமையோடும் தைரியத்தோடும் பிறரை நேசிப்போமாக.