1880ஆம் ஆண்டு வெளிவந்த லியூ வாலஸ்ஸின் (Lew Wallace) பென் ஹர்: எ டேல் ஆப் கிறைஸ்ட் (Ben-Hur: A tale of Christ) என்ற கிறிஸ்துவைப் பற்றிய நாவல் இன்று வரை பிரசுரத் திலுள்ளது. இது 19ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கிறிஸ்தவ புத்தகமாகக் கருதப்படுகிறது. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றோடு பின்னிப் பிணைக்கப்பட்ட யூதா பென் ஹர் (Judah Ben Hur) என்னும் யூதகுலப் பிரபுவின் கதை இன்றும் அனேக வாசகர்களை தன்வசப்படுத்தியுள்ளது. 

அப்புத்தகத்தை எழுதியபொழுது தன் வாழ்கையே மாற்றமடைந்ததாக அப்புத்தகத்தின் ஆசிரியர் கூறியதாக ஹியுமனிட்டீஸ் (Humanities) என்னும் பத்திரிக்கையில் எமி லிஃப்சன் (Amy Lifson) தெரிவித்துள்ளார்: “இயேசு கிறிஸ்துவின் சிலுவைக்காட்சிகளின் ஊடாய் வாசகர்களை பென்-ஹர் வழிநடத்தியது போல, இயேசுவை விசுவாசிக்கும்படியாக லியூ வாலஸ்சையும் அவரண்டை நடத்திச்சென்றுள்ளான்.” வாலஸ் தாமே, “நான் நசரேனாகிய இயேசுவைக் கண்டேன்… வேறெந்த சாதாரண மனுஷனும் நடப்பிக்க முடியாத கிரியைகளை அவர் நடப்பிக்க கண்டேன்,” எனக் கூறியுள்ளார்.

சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வாழ்க்கை, அவருடனேகூட நாம் நடந்து, அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும் அவருடைய அற்புதங்களைக் காணவும் நமக்கு உதவுகிறது. தான் எழுதிய சுவிசேஷ புத்தகத்தின் முடிவில், “இந்தப் புத்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாக செய்தார். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்படிருக்கிறது” என யோவான் எழுதியுள்ளார் (யோவா. 20:30-31).

லியூ வாலஸ் வேதாகமத்தை வாசித்து, ஆய்வு செய்து எழுதியதின் மூலம் இயேசுவை விசுவாசித்தது போலவே, அவருக்குள்ளும் அவரின் மூலமும் நாம் நித்திய வாழ்வை சுதந்தரித்துக்கொள்ளும் பொருட்டு அவருடைய வார்த்தை நம்முடைய மனதையும் இருதயத்தையும் மறுரூபமாக்குகிறது.