ஸ்காட்லாந்து (Scotland) தேசத்தின் தெற்கு லனார்க்ஷைர் (Lanarkshire) என்னும் இடத்திலுள்ள கால்நடை பண்ணையில் டான் (Don) என்னும் காவல் நாய் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் காலை, டான் தன்னுடைய எஜமானாகிய டாமுடன் (Tom) விலங்குகளை கண்காணிப்பதற்காக, ஒரு சிறிய சரக்கு வண்டியிலே பயணித்து சென்றது. அவ்விடத்தை சென்றடைந்ததும், வண்டியை விட்டு கீழே இறங்கின டாம், பிரேக் போட மறந்து விட்டான். அதனால், வண்டி தானாக அம்மலைரோட்டையும், அதிக வாகனங்கள் செல்லக்கூடிய வேறு இரண்டு சாலைகளையும் கடந்து சென்றது. எனினும் வண்டி பத்திரமாக நின்றது. அவ்வண்டி கடந்து செல்லும் பொழுது, பார்ப்பவர்களுக்கு ஒரு நாய் வண்டி ஓட்டி செல்வது போல இருந்தது. ஏனெனில் டான் அப்பொழுது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தது. உண்மையில் சொல்லப்போனால், எல்லா நேரமும் நாம் காண்பதெல்லாம் உண்மையல்ல.

எலிசாவையும் அவன் வேலைக்காரனையும் சிறைப்பிடித்துப் போகும்படியாய் சீரிய தேசத்து ராஜா குதிரைகளையும், இரதங்களையும், பலத்த இராணுவத்தையும் அனுப்பி அப்பட்டணத்தை சூழ்ந்து கொண்டான். அதைக்கண்ட எலிசாவின் வேலைக்காரன், தங்களுக்கு அழிவு நிச்சயம் என நினைத்து கலங்கினான். ஆனால் எலிசா, “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” (2 இரா. 6:16) என்று கூறி, தேவனை நோக்கி, தன் வேலைக்காரனுடைய கண்களைத் திறக்கும்படியாக வேண்டுதல் செய்தான். உடனே அவன் கண்கள் திறக்கப்பட்டு, தங்களைப் பாதுகாக்கும் திரளான பரலோக சேனை அவர்களை சூழ்ந்திருக்க கண்டான்.

நம்பிக்கையற்றதாக நாம் கருதும் நிலைமைகள் அனைத்தும் நாம் எண்ணுவது போல் அல்ல. மிஞ்சும் அளவிற்கு நாம் அமிழ்ந்து போகக்கூடிய நிலைமையில் இருந்தாலும், தேவன் நம்மோடு கூட நம் பக்கத்தில் இருக்கிறார் என்பதை நினைவுகூருவோம். “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” (சங். 91:11).