ஜேனட் (Janet), ஆங்கில ஆசிரியராக வெளிநாட்டிலுள்ள ஒரு பள்ளியில் பணிபுரியும் படி சென்றாள். அங்கு உற்சாகமற்ற சோர்வான சூழ்நிலை காணப்பட்டது. அவரவர் அவர்களுடைய வேலையை செய்தார்கள், ஆனால் ஒருவரும் சந்தோஷமாக காணப்படவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யவோ, உற்சாகப்படுத்தவோ இல்லை. ஆனால், தேவன் தனக்கு செய்த எல்லாவற்றையும் நினைத்து, தான் செய்த எல்லாவற்றிலும் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள். அவள் எப்பொழுதும் புன்னகையோடேயிருந்தாள். அவள் தோழமை உணர்வோடு தானாகவே மற்றவருக்கு உதவி செய்தாள். அவள் பாடல்களையும், பாமாலைகளையும் முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள்.

ஜேனட் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளக் கொள்ள, கொஞ்சம் கொஞ்சமாக அப்பள்ளியின் சூழ்நிலை மாறியது. ஒவ்வொருவராக புன்னகைக்கவும், ஒருவருக்கொருவர் உதவவும் ஆரம்பித்தனர். அப்பொழுது பள்ளியை பார்வையிட வந்த நிர்வாகி, தலைமை ஆசிரியரை பார்த்து ஏன் அப்பள்ளி வித்தியாசமாக உள்ளது என்று கேட்டதற்கு, விசுவாசி அல்லாத அத்தலைமை ஆசிரியர், “இயேசு மகிழ்ச்சியை கொண்டு வருகிறார்” என்று பதிலளித்தார். ஜேனட் பொங்கி வழியும் கிறிஸ்துவின் சந்தோசத்தை கொண்டிருந்தாள், அதை தன்னை சுற்றி இருந்தவர்களின் மீதும் தெளித்தால்.

சாதாரண மேய்ப்பர்களிடம் ஒரு அசாதாரண பிறப்பை பற்றிய செய்தியை அறிவிக்க தேவன் ஒரு தேவதூதனை அனுப்பினார் என்று லூக்கா சுவிசேஷம் கூறுகிறது. புதிதாகப் பிறந்த அக்குழந்தை, “எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசத்தை உண்டாக்கும்” என்று வியப்பூட்டும் விதத்தில் அதிகாரப்பூர்வமாக அத்தூதன் அறிவித்தார் (லூக். 2:10). அது அப்படியே நிறைவேறிற்று.

நூற்றாண்டுகளைக் கடந்து அப்பொழுதிலிருந்து இச்செய்தி பரவி, இன்று நாம் கிறிஸ்துவின் மகிழ்ச்சியை உலகிற்கு பறைசாற்றும் தூதர்களாக இருக்கிறோம். நம்முன் வாசம் செய்யும் ஆவியானவரின் உதவியோடு இயேசுவைப் பின்பற்றி மற்றவர்களுக்கு சேவை செய்வதின் மூலம் அவருடைய மகிழ்ச்சியைத் தொடர்ந்து பரவ செய்வோம்.