டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைகழகத்தில் உள்ள கால் பந்தாட்ட மைதானத்தில் ஒரு பெரிய அறிவிப்பு பலகை இருக்கும். “பன்னிரெண்டாவது மனிதனின் வீடு” என்று அதில் எழுதியிருக்கும். ஒவ்வொரு அணியிலும் பதினொரு போட்டியாளர்கள் உண்டு. அந்த பல்கலைகழகத்தில் படிக்கும் மற்ற மாணவர்கள் சார்பாக அவர்களது அணியை உற்சாகப் படுத்தும் விதத்தில், அந்த மைதானத்தில் நின்று கொண்டு போட்டி முடியும் வரை உற்சாக படுத்துவான். அவன் தான் அந்த பன்னிரெண்டாவது மனிதன். இந்த வழக்கம் 1922ஆம் ஆண்டு தோன்றியது. அப்படி விளையாடும்பொழுது ஆட்டக்காரர் யாரேனும் காயமடைந்தால் அவனுக்குப் பதிலாக விளையாட அந்த அணியின் பயிற்சியாளர் ஓர் மாணவனை தயார் நிலையில் அங்கு நிற்க வைத்தார். அவன் விழையாட்டுக்குள் ஒருபொழுதும் பங்கு கொள்ள அவசியம் ஏற்படாத பொழுதும், போட்டி முடியும் வரை அங்கு நின்று கொண்டிருந்தான். அவனது பிரசன்னம் அந்த அணியை மிகவும் உற்சாகப்படுத்தி பலப்படுத்தியது.

அதிகமாக உபத்திரவப்பட்டும் தேவனிடத்தில் விசுவாசமாய் இருந்த விசுவாச வீரர்களைப் பற்றி எபிரெயர் 11ஆம் அதிகாரம் கூறுகிறது. “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (வச. 1) என்று அவர்களைக் குறித்து 12ஆம் அதிகாரம் இப்படியாக துவக்குகிறது.

நம்முடைய விசுவாசப் பயணத்தில் நாம் தனியாகப் பயணிக்கவில்லை. நமக்கு முன்சென்ற சாதாரண மக்களும், பரிசுத்தவான்களும், தேவனிடத்தில் விசுவாசத்துடன் நடந்து சென்ற ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அவர்கள் இப்பொழுது பரலோகத்தில் இருந்து நம்மைப் பலப்படுத்தி வருகின்றனர். நாம் வாழ்க்கை எனும் மைதானத்தில் இருக்கும் பொழுது, அவர்கள் தான் நமக்கு பக்கபலமாய் நின்று கொண்டிருக்கும் நம்முடைய ஆவிக்குரிய 12ஆவது மனிதர்.

“விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற” (12:1), இயேசுவின் மேல் நம் கண்களை பதிய வைக்கும் பொழுது, அவரை பின்பற்றினவர்களினால் நாம் இப்பொழுது உற்சாகப்படுத்தப் படுகிறோம்.