பிறருக்காக மரித்தல்
எனக்கு பறவைகள் மேல் அதிகப் பிரியம். ஆகவே எனது மகள் ஆலிஸிற்காக கூட்டில் அடைக்கப்பட்ட 6 பறவைகளை வாங்கி வீட்டிற்கு கொண்டு சென்றேன். அந்தப் பறவைகளுக்கான தேவைகளை ஆலிஸ் அனுதினமும் கவனித்து வந்தாள். அதில் ஒரு பறவை நோய்வாய்ப்பட்டு மரித்து விட்டது. ஒருவேளை, பறவைகளை கூட்டிற்குள் அடைத்து வைக்காமலிருந்தால், அப்பறவைகள் நன்றாக வளரலாமோ என்று எண்ணினோம். ஆகவே மற்ற 5 பறவைகளையும் கூட்டிலிருந்து திறந்து விட்டோம். அவைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியே பறந்து சென்றன.
“அப்பா, ஒரு பறவையின் மரணம் மற்றப்பறவைகளை விடுதலை செய்ய வைத்தது என்பதை நீங்கள் உணர்ந்தீர்களா?” என்று ஆலிஸ் அவளது தகப்பனாரிடம் குறிப்பிட்டுக் கூறினாள்.
நமக்காக இயேசு செய்தது இதுதானே? ஒரு மனிதனின் (ஆதாம்) பாவம் உலகத்திற்கு ஆக்கினையைக் கொண்டுவந்ததுபோல, ஒரு மனிதனின் (இயேசு) நீதியினால் அவரை விசுவாசிப்பவர்களுக்கு இரட்சிப்பு கிடைக்கிறது (ரோம. 5:12–19). “நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” (யோவா. 10:11) என்று இயேசு கூறினார். “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்”
(1 யோவா. 3:16) என்று அதை செயல்படத்தக்க முறையில் யோவான் விளக்குகிறார். இது உண்மையில் சரீரப்பிரகாரமான மரணத்தைக் குறிப்பிடவில்லை. இயேசுவின் தியாகமான அன்பில் நமது வாழ்க்கையை இணைக்கும்பொழுது, “நாம் நமது ஜீவனைக் கொடுக்கிறோம்” என்று அர்த்தமாகும். உதாரணமாக நாம் நமது உலகப்பிரகாரமான பொருட்களை தேவையுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக அவற்றை விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும் (வச. 17), அல்லது நமது உதவியோ அல்லது ஆறுதலோ தேவையான ஒருவருடன் நமது நேரத்தை செலவழிக்க முன்வர வேண்டும்.
இன்றையதினம் யாருக்காக நீங்கள் தியாகம் பண்ணப்போகிறீர்கள்?
எல்லோருக்கும் நல்வரவு!
திருச்சபையின் வாலிபருக்கான திரைப்படம் காண்பிப்பதற்காக அநேக நாட்களாக ஜெபத்துடன் காத்திருந்தோம். காண்பிப்பதற்கான இரவும் வந்தது. கிராமத்தில் எல்லா பக்கங்களிலும் அந்த நாளுக்கான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. சூட்டடுப்பில் பிஸ்ஸாக்கள் (ரொட்டி போன்ற ஒருவகை உணவு) சூடாகிக் கொண்டிருந்தன. நியூயார்க்கில் பயங்கரமான குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஓர் இளைஞர் குழுவினர் ஒரு இளம் போதகர் மூலமாக இயேசுவை ஏற்றுக்கொண்ட விதத்தை விளக்கும் அந்தத் திரைப்படம், மேலும் அநேக வாலிபப்பிள்ளைகள் திருச்சபையின் வாலிபக்குழுவில் சேர்வதற்கு காரணமாக இருக்குமென்று, அந்தத் திருச்சபையின் வாலிபர்களின் போதகர் ஸ்டீவ் நம்பிக்கையுடன் இருந்தார்.
ஆனால், அந்த மாலைப்பொழுதில் மிக முக்கியமான கால்பந்தாட்டப் போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படப்போவதை அவர் அறியவில்லை. ஆகவே அவர் எதிர்பார்த்தை விட குறைவாகவே வாலிபர்கள் அன்று வந்தார்கள். மனதிற்குள்ளாக பெருமூச்சுவிட்டு, அறையிலிருந்த விளக்குகளை ஒளி மங்கச்செய்து ஸ்டீவ் திரைப்படத்தைப்போட ஆயத்தமானார். அப்பொழுது திடீரென தோல்உடைகளை அணிந்த மோட்டார் பைக் குழுவைச் சேர்ந்த 5 வாலிபர்கள் அந்த அறைக்குள் நுழைந்தார்கள். ஸ்டீவின் முகம் பயத்தினால் வெளிறியது.
டீ டாக் (T Dog) என்று அழைக்கப்பட்ட அந்த குழுவின் தலைவன், ஸ்டீவைப் பார்த்து அவன் தலையை துலுக்கி, “இந்தத் திரைப்படம் அனைவருக்கும் இலவசம்தானே?” என்று கூறினான். “திருச்சபையின் வாலிபர் குழுவிற்கு மட்டும்தான்” என்று ஸ்டீவ் கூறப்போன சமயத்தில் டீ டாக் (T Dog) என்ற அந்தத் தலைவன் கீழே குனிந்து இயேசு என்ன செய்வார்? என்ற எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருந்த WWJD (What would Jesus Do) ஒரு கைப்பட்டையை எடுத்து, “இது உங்களுடையது தானே நண்பா?” என்று கேட்டான். மிகவும் சங்கடமான உணர்வுடன், ஆமாம் என்று ஸ்டீவ் கூறினார். பின் அங்கு வந்த புதிய விருந்தாளிகள் இருக்கையில் அமரும் வரை காத்திருந்தார்.
ஸ்டீவின் நிலையில் நீங்கள் எப்பொழுதாவது இருந்ததுண்டா? இயேசுவைப்பற்றிய நற்செய்தியை பிறருக்கு அறிவிக்க நீங்கள் ஆவலாக இருக்கலாம். ஆனால் உங்கள் உள்மனதில் ஏற்றுக்கொள்ளப் படக்கூடியவர்கள் “இவர்கள்தான்” என்ற பட்டியலை வைத்திருக்கலாம். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபொழுது, அவர் பழகின மக்களைப்பற்றி யூத மதத்தலைவர்கள் அவரைக் குற்றப்படுத்தினார்கள். ஆனால் பிறரால் வேண்டாம் என்று தள்ளப்பட்ட மக்களை இயேசு அன்புடன் ஏற்றுக்கொண்டார். ஏனெனில் அவர்களுக்கு அவர் அதிகமாக தேவைப்படுகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார் (லூக். 5:31–32).
எச்சரிப்பு!
நுகர்வோர் பயன்படுத்தும் உற்பத்திப் பொருட்களில் கீழ்க்கண்ட எச்சரிப்புகள் காணப்படுகின்றன:
“மடக்குமுன் குழந்தையை தூக்கிவிடுங்கள்.” (குழந்தைகளின் தள்ளுவண்டி)
“ஆக்ஸிஜன் கொடுக்காது.” (தூசிக்காக நாசியில் அணியும் முகமூடி)
“வாகனம் ஓட்டும்பொழுது உங்களது கைபேசியை ஒருக்காலும் உபயோகப்படுத்தாதீர்கள்.” (கையினால் பயன்படுத்தத் தேவையற்றதும் வாகனம் ஓட்டிக்கொண்டு பேசக்கூடிய Drive ‘n’ Talk செல்போன்)
“பயன்படுத்தும்பொழுது இப்பொருள் நகரும்.” (ஸ்கூட்டர்)
“ஒரு முட்டாளிடமிருந்து முட்டாள்தனத்தை எதிர்பாருங்கள்” என்ற முதுமொழி நாபால் அணிந்திருந்தால், அது அவனைக்குறித்த சரியான எச்சரிப்பைக் கொடுக்கும் குறிப்புச் சீட்டாக இருந்திருக்கும் (1 சாமுவேல் 25ஐப் பார்க்க). அவன் தாவீதிடம் பேசினபொழுது காரணமற்ற கோபத்துடன் பேசினான். சவுலிடமிருந்து தாவீது தப்பி ஓடினபொழுது, நாபால் என்ற ஐசுவரியவானின் ஆட்டு மந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுத்தான். நாபால் அவனது ஆடுகளுக்கு மயிர் கத்தரித்து விருந்து வைக்கிறான், என்று தாவீது கேள்விப்பட்ட பொழுது, அவனது ஆட்களில் 10 பேரை நாபாலிடம் அனுப்பி அவனும் அவனுடைய ஆட்களும், நாபாலினுடைய ஆட்டுமந்தைகளை வனாந்திரத்தில் பாதுகாத்து கொண்டதிற்குப் பதிலாக, அவனுக்கும் அவனது ஆட்களுக்கும் உணவு தந்து உதவுமாறு மரியாதையுடன் கேட்டு அனுப்பினான் (வச. 4-8).
தாவீதின் விண்ணப்பத்திற்கு, நாபால் மிகவும் கோபத்துடன் மறுமொழி கொடுத்தான். “தாவீது என்பவன் யார்?... நான் அடித்து சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்கு கொடுப்பேனோ?” (வச. 10, 11) என்றான். அன்றைய நாட்களில் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும்பொழுது, மற்றவர்களை விருந்திற்கு அழைக்க வேண்டும் என்ற பழக்கத்தின்படி அவன் தாவீதை அழைத்து உபசரிக்கவில்லை. மேலும் தாவீதை மரியாதை இல்லாமல் பேசி, இழிவு படுத்தினான். முக்கியமாக தாவீது அவனது ஆட்டு மந்தைகளைக் காத்துக்கொண்ட பணிக்கான கூலியைக் கூட நாபால் அவனுக்குத் தரவில்லை.
உண்மையாகக் கூறப்போனால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் சிறிய அளவில் நாபாலின் குணம் இருக்கிறது. சில நேரங்களில் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறோம். இதற்கான ஒரே மருந்து, நாம் நமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிடுவதே ஆகும். அவர் நம்மை மன்னிக்க முன்வந்து, நமக்கு ஞானம் தந்து போதித்து வழிநடத்துவார்.
மாறுபடும் இருதயங்கள்
அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்நாட்டுப்போர் நடந்த இறுதி நாட்களில் ஐக்கிய படைக்கு ஜாஸ்வா சேம்பர்லின் தலைவனாக இருந்து படையை வழிநடத்தினார். அவரது படை வீரர்கள் சாலையின் இருபக்கமும் நின்றார்கள், ஆகவே கூட்டமைப்புப் படை சரணடைந்தபொழுது, சாலையின் இருபக்கமும் நின்ற அவனது படைவீரர்களுக்கு நடுவாக எதிராளியின் படையினர் நடந்து செல்ல வேண்டியதிருந்தது. ஒரு தவறான வார்த்தையோ, பகைமை உணர்ச்சியைத் தூண்டும் ஒரு செயலோ, அதிக ஆவலுடன் காத்திருந்த சமாதானத்தை படுகொலை சம்பவமாக மாற்றிவிடலாம். உணர்வுகள் தொடப்படக்கூடிய வண்ணம் சேம்பர்லின் ஒரு புத்திசாலித்தனமான கட்டளையைக் கொடுத்தார். அவர்களது எதிராளிகளுக்கு மரியாதை செலுத்தும் வண்ணமாக, அவனது படை வீரர்களை அவர்களுக்கு சல்யூட் பண்ணும்படி கூறினான். பழிவாங்குதலுக்கோ, தீமை விளைவிக்கக்கூடிய பேச்சுக்கோ அங்கு இடமில்லை. அவனுடைய வீரர்களை சல்யூட் பண்ணும் வண்ணமாக துப்பாக்கிகளை உயர்த்தி, குண்டுகளை முழக்கி, வாள்களை உயர்த்தி எதிராளிகளுக்கு மரியாதை செலுத்தி நின்றார்கள்.
லூக்கா 6ம் அதிகாரத்தில் இயேசு மன்னிப்பைப் பற்றி பேசினபொழுது, கிருபையைப் பெற்ற மக்களுக்கும், கிருபை இல்லாத மக்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள நமக்கு உதவி செய்தார். அவரது மன்னிப்பை அறிந்தவர்கள் மற்றவர்களைப்போல அல்லாமல் முற்றிலும் மாறுபட்டு இருப்பார்கள். பிறரால் செய்ய இயலாது என்று எண்ணும் காரியங்களை நாம் செய்ய வேண்டும். நமது சத்துருக்களை மன்னித்து அவர்களை சிநேகிக்க வேண்டும். “உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள் (லூக். 6:36).
இந்தக்கோட்பாடை நாம் பின்பற்றினால் நாம் பணி செய்யும் இடங்களில், நமது குடும்பங்களில் ஏற்படும் விளைவுகளை கற்பனை செய்து பாருங்கள். பகைவர்களுக்கு மரியாதையுடன் சல்யூட் செய்த நிகழ்ச்சி, படைகளை ஒற்றுமையாக்க முடிந்தால், நம்மூலமாக கிறிஸ்துவின் கிருபை பிரதிபலிக்கப்பட்டால், வல்லமையான பெரிய மாற்றங்களை உண்டுபண்ணும். வேதாகமத்தில் இதற்கான சான்றுகளைப் பார்க்கிறோம். உதாரணமாக ஏமாற்றின சகோதரனான யாக்கோபை கட்டித்தழுவிய ஏசாவின் செயல் (ஆதி. 33:4), மிகவும் சந்தோஷத்துடன் சகேயு செய்த பாவ அறிக்கை (லூக். 19:1–10), கெட்ட குமாரனை ஓடிப்போய் கட்டி முத்தமிட்ட தகப்பனாரின் செயல் (லூக். 15) ஆகும்.
கிறிஸ்துவினுடைய கிருபையினால் நமக்கும், நமது எதிராளிகளுக்கும் இடையே உள்ள கசப்புணர்ச்சி, கருத்து வேறுபாடு இவைகளுக்கு இன்றே இறுதிநாளாக இருக்கட்டும்.
எதிர்மறையான காரியத்தைச் செய்தல்
வனாந்திரமான இடத்தில் நடைபயணமாக சுற்றுலா செல்வது, அச்சத்தை தரக்கூடியதாகக் காணப்படலாம். ஆனால், வெளி ஊர்களை சுற்றிப் பார்க்கும் ஆவலர்களுக்கு, இது மேலும் ஆவலைத் தூண்டுவதாகவே உள்ளது. வனாந்தரமான இடத்தில் நடந்து செல்லும் பயணிகளுக்கு அவர்கள் உடன் எடுத்துச் செல்லும் தண்ணீரை விட அதிக தண்ணீர் தேவைப்படும். ஆகவே வடிகட்டிகள் இணைக்கப்பட்டுள்ள தண்ணீர் புட்டிகளை அவர்கள் வாங்குகிறார்கள். புட்டிகளில் வடிகட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் போகும் வழியிலுள்ள நீர் நிலைகளில் புட்டிகளை நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், அப்புட்டிகளிலுருந்து நீரை அருந்தும் முறை நாம் நினைப்பதற்கு எதிர்மறையானது. புட்டிகளை சாய்ப்பதால் தண்ணீர் வெளியே வராது. தாகத்துடன் இருக்கும் நடை பயணி, வடிகட்டி வழியாக நீர் வெளியே வருவதற்கு புட்டிக்குள் மிகவேகமாக ஊத வேண்டும். இயற்கையாக நடைபெறும் காரியத்திற்கு பதிலாக உண்மையில் நடக்கும் செயல் எதிர்மறையாக உள்ளது.
நாம் இயேசுவைப் பின்பற்றும் பொழுது உண்மைக்கு எதிர்மறையான காரியத்தையே பார்க்கிறோம். உதாரணமாக உலகக் கட்டளைகளை கைக்கொள்வதின் மூலம் நாம் தேவனை நெருங்கிச் செல்ல இயலாது என்று பவுல் தெளிவுபடுத்துகிறார். “இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள் போல, மனுஷருடைய கற்பனைகளின்படியும், போதனைகளின்படியும் நடந்து, தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?” (கொலோ. 2:20-21) என்று பவுல் கேட்கிறார்.
அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? “நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்ததுண்டானால் மேலானவைகளைத் தேடுங்கள்” (கொலோ. 3:1). மேலும் உயிரோடிருக்கும் மக்களிடம் “நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது” (கொலோ. 3:3) என்று பவுல் மேற்சொன்ன கேள்விக்கு பதில் அளித்தார்.
இந்த உலகக்காரியங்களுக்கு நாம் “மரித்தவர்களாகவும்,” கிறிஸ்துவுக்கென ஜீவிக்கிறவர்களாகவும் நம்மை கருதவேண்டும். “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக் கடவன்” (மத். 20:26) என்று கூறினதை வாழ்ந்து காண்பித்த இயேசுவின் வழியில் நடக்க நாம் இப்பொழுது விரும்புகிறோம்.