அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்நாட்டுப்போர் நடந்த இறுதி நாட்களில் ஐக்கிய படைக்கு ஜாஸ்வா சேம்பர்லின் தலைவனாக இருந்து படையை வழிநடத்தினார். அவரது படை வீரர்கள் சாலையின் இருபக்கமும் நின்றார்கள், ஆகவே கூட்டமைப்புப் படை சரணடைந்தபொழுது, சாலையின் இருபக்கமும் நின்ற அவனது படைவீரர்களுக்கு நடுவாக எதிராளியின் படையினர் நடந்து செல்ல வேண்டியதிருந்தது. ஒரு தவறான வார்த்தையோ, பகைமை உணர்ச்சியைத் தூண்டும் ஒரு செயலோ, அதிக ஆவலுடன் காத்திருந்த சமாதானத்தை படுகொலை சம்பவமாக மாற்றிவிடலாம். உணர்வுகள் தொடப்படக்கூடிய வண்ணம் சேம்பர்லின் ஒரு புத்திசாலித்தனமான கட்டளையைக் கொடுத்தார். அவர்களது எதிராளிகளுக்கு மரியாதை செலுத்தும் வண்ணமாக, அவனது படை வீரர்களை அவர்களுக்கு சல்யூட் பண்ணும்படி கூறினான். பழிவாங்குதலுக்கோ, தீமை விளைவிக்கக்கூடிய பேச்சுக்கோ அங்கு இடமில்லை. அவனுடைய வீரர்களை சல்யூட் பண்ணும் வண்ணமாக துப்பாக்கிகளை உயர்த்தி, குண்டுகளை முழக்கி, வாள்களை உயர்த்தி எதிராளிகளுக்கு மரியாதை செலுத்தி நின்றார்கள்.

லூக்கா 6ம் அதிகாரத்தில் இயேசு மன்னிப்பைப் பற்றி பேசினபொழுது, கிருபையைப் பெற்ற மக்களுக்கும், கிருபை இல்லாத மக்களுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள நமக்கு உதவி செய்தார். அவரது மன்னிப்பை அறிந்தவர்கள் மற்றவர்களைப்போல அல்லாமல் முற்றிலும் மாறுபட்டு இருப்பார்கள். பிறரால் செய்ய இயலாது என்று எண்ணும் காரியங்களை நாம் செய்ய வேண்டும். நமது சத்துருக்களை மன்னித்து அவர்களை சிநேகிக்க வேண்டும். “உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள் (லூக். 6:36).

இந்தக்கோட்பாடை நாம் பின்பற்றினால் நாம் பணி செய்யும் இடங்களில், நமது குடும்பங்களில் ஏற்படும் விளைவுகளை கற்பனை செய்து பாருங்கள். பகைவர்களுக்கு மரியாதையுடன் சல்யூட் செய்த நிகழ்ச்சி படைகளை ஒற்றுமையாக்க முடிந்தால், நம்மூலமாக கிறிஸ்துவின் கிருபை பிரதிபலிக்கப்படுமேயானால், வல்லமையான பெரிய மாற்றங்களை உண்டுபண்ண முடியும். வேதாகமத்தில் இதற்கான சான்றுகளைப் பார்க்கிறோம். உதாரணமாக ஏமாற்றின சகோதரனான யாக்கோபை கட்டித்தழுவிய ஏசாவின் செயல் (ஆதி. 33:4), மிகவும் சந்தோஷத்துடன் சகேயு செய்த பாவ அறிக்கை (லூக். 19:1–10), கெட்ட குமாரனை ஓடிப்போய் கட்டி முத்தமிட்ட தகப்பனாரின் செயல் (லூக். 15) ஆகும்.

கிறிஸ்துவினுடைய கிருபையினால் நமக்கும், நமது எதிராளிகளுக்கும் இடையே உள்ள கசப்புணர்ச்சி, கருத்து வேறுபாடு இவைகளுக்கு இன்றே இறுதிநாளாக இருக்கட்டும்.