வனாந்திரமான இடத்தில் நடைபயணமாக சுற்றுலா செல்வது, அச்சத்தை தரக்கூடியதாகக் காணப்படலாம். ஆனால், வெளி ஊர்களை சுற்றிப் பார்க்கும் ஆவலர்களுக்கு, இது மேலும் ஆவலைத் தூண்டுவதாகவே உள்ளது. வனாந்தரமான இடத்தில் நடந்து செல்லும் பயணிகளுக்கு அவர்கள் உடன் எடுத்துச் செல்லும் தண்ணீரை விட அதிக தண்ணீர் தேவைப்படும். ஆகவே வடிகட்டிகள் இணைக்கப்பட்டுள்ள தண்ணீர் புட்டிகளை அவர்கள் வாங்குகிறார்கள். புட்டிகளில் வடிகட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் போகும் வழியிலுள்ள நீர் நிலைகளில் புட்டிகளை நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், அப்புட்டிகளிலுருந்து நீரை அருந்தும் முறை நாம் நினைப்பதற்கு எதிர்மறையானது. புட்டிகளை சாய்ப்பதால் தண்ணீர் வெளியே வராது. தாகத்துடன் இருக்கும் நடை பயணி, வடிகட்டி வழியாக நீர் வெளியே வருவதற்கு புட்டிக்குள் மிகவேகமாக ஊத வேண்டும். இயற்கையாக நடைபெறும் காரியத்திற்கு பதிலாக உண்மையில் நடக்கும் செயல் எதிர்மறையாக உள்ளது.

நாம் இயேசுவைப் பின்பற்றும் பொழுது உண்மைக்கு எதிர்மறையான காரியத்தையே பார்க்கிறோம். உதாரணமாக உலகக் கட்டளைகளை கைக்கொள்வதின் மூலம் நாம் தேவனை நெருங்கிச் செல்ல இயலாது என்று பவுல் தெளிவுபடுத்துகிறார். “இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள் போல, மனுஷருடைய கற்பனைகளின்படியும், போதனைகளின்படியும் நடந்து, தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?” (கொலோ. 2:20-21) என்று பவுல் கேட்கிறார்.

அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? “நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்ததுண்டானால் மேலானவைகளைத் தேடுங்கள்” (கொலோ. 3:1). மேலும் உயிரோடிருக்கும் மக்களிடம் “நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது” (கொலோ. 3:3) என்று பவுல் மேற்சொன்ன கேள்விக்கு பதில் அளித்தார்.

இந்த உலகக்காரியங்களுக்கு நாம் “மரித்தவர்களாகவும்,” கிறிஸ்துவுக்கென ஜீவிக்கிறவர்களாகவும் நம்மை கருதவேண்டும். “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக் கடவன்” (மத். 20:26) என்று கூறினதை வாழ்ந்து காண்பித்த இயேசுவின் வழியில் நடக்க நாம் இப்பொழுது விரும்புகிறோம்.