துதியின் வாசல்கள்
உலகத்தின் தலைசிறந்த சில பட்டணங்களில் நுழையும்பொழுது, பெர்லின், பிராண்டென்பெர்க் நுழைவாயில், (Brandenburg Gate, Berlin) யோப்பா நுழைவாயில், எருசலேம் (Jaffa Gate, Jerusalem) மற்றும் லண்டன், டவுனிங் தெருவிலுள்ள வாயில்களை (Downing St., London) போன்ற நுழைவாயில்களை காணலாம். அந்த நுழைவாயில்கள் பாதுகாப்பிற்காகவோ, கொண்டாட்டங்களுக்காகவோ கட்டப்பட்டது. எதுவாயினும், அவைகளுக்குள்ள வேறுபாடு அவைகள் பட்டணத்திற்கு வெளியேவோ உள்ளேயோ இருப்பதிலிருக்கிது. சில நுழைவாயில்கள் திறந்தே இருக்கும். வேறு சில, ஒரு சிலருக்கு தவிர பொதுவாகப் பூட்டியே இருக்கும்.
தேவ சமூகத்தின் வாசல்கள் எப்பொழுதும் நமக்கு திறந்தே இருக்கிறது.…
பட்சிக்கும் சோதனைகள்
மரங்களுக்கு நெருப்பு மிக மோசமான ஒரு எதிரி. ஆனால், அதுவே உபயோகமானதாகவும் திகழலாம். காட்டின் நிலப்பகுதியில் அடிக்கடி குறைந்த வீரியத்தில் பற்றியெரியும் நெருப்பு அங்கு கிடக்கும் காய்ந்த இலைகளையும், கிளைகளையும் சுட்டெரித்துவிடுகிறது. ஆனால், மரங்களுக்கோ ஒரு சேதமும் ஏற்படுவதில்லை. இதை வல்லுநர்கள் “குளிர்ந்த” நெருப்பு என கூறுகிறார்கள். இதன் விளைவாக ஏற்படும் சாம்பல், அங்கு விதைகள் வளர்வதற்கு ஏற்றதாயிருக்கிறது. ஆச்சரியம் என்னவெனில் மரங்கள் நன்கு வளர குறைந்த வீரியம் கொண்ட நெருப்பு அவசியமாயிருக்கிறது.
அதைப்போலவே, வேதத்தில் அக்கினியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சோதனைகள், நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின்…
புள்ளிகளை இனைத்தல்
1880களில் பிரஞ்ச் ஒவியர், ஜார்ஜஸ் சவுரட் (Georges Seurat) புள்ளி ஓவியம் (Pointillism) என்ற புதிய ஓவிய முறையை அறிமுகப்படுத்தினார். பெயருக்கேற்றவாறு, சவுரட், தூரிகையை பயன்படுத்தி வண்ணம் தீட்டுவதற்கு பதிலாக, வண்ணமயமான புள்ளிகளைக் கொண்டு கலைநயமிக்க உருவத்தை உண்டாக்கினார். அருகில் சென்று பார்த்தால், தனித்த புள்ளிகளின் கூட்டுத் தொகுப்பு போல காட்சியளிக்கும். ஆனால், அதையே சற்றுப் பின் தள்ளி நின்று பார்த்தால், நம் மனித கண்கள் அப்புள்ளிகளை ஒன்றோடு ஒன்று கலந்து பிரகாசமான வண்ணமயமிக்க உருவப்படத்தையோ அல்லது இயற்கை காட்சியையோ காணச்செய்யும்.
வேதாகமத்தின் உருவப்படமும்…
கலோரிகளுக்கேற்ற மதிப்புதானா?
எனது தேசமாகிய சிங்கப்பூரில் கிடைக்கும் தட்டையான ரொட்டி வகையை சேர்ந்த முட்டை பரோட்டா எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால், 57 கிலோ எடையுள்ள ஒருவன் 8 கிலோ மீட்டர் வேகத்தில் 30 நிமிடங்கள் ஒடினால் 240 கலோரிகளை எரிக்கலாம் என்பதை படித்துக் கலக்கமடைந்தேன். ஏனென்றால், அது ஒரே ஒரு முட்டை பரோட்டாவுக்குச் சமம்.
நான் உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து, அந்த எண்களெல்லாம் எனக்கு புதிய முக்கியத்துவம் வாய்ந்ததாயிற்று. என்னையறியாமல், இவ்வளவு கலோரிகளுக்கு ஏற்ற மதிப்புடையதா இந்த உணவு, என கேட்க…