1880களில் பிரஞ்ச் ஒவியர், ஜார்ஜஸ் சவுரட் (Georges Seurat) புள்ளி ஓவியம் (Pointillism) என்ற புதிய ஓவிய முறையை அறிமுகப்படுத்தினார். பெயருக்கேற்றவாறு, சவுரட், தூரிகையை பயன்படுத்தி வண்ணம் தீட்டுவதற்கு பதிலாக, வண்ணமயமான புள்ளிகளைக் கொண்டு கலைநயமிக்க உருவத்தை உண்டாக்கினார். அருகில் சென்று பார்த்தால், தனித்த புள்ளிகளின் கூட்டுத் தொகுப்பு போல காட்சியளிக்கும். ஆனால், அதையே சற்றுப் பின் தள்ளி நின்று பார்த்தால், நம் மனித கண்கள் அப்புள்ளிகளை ஒன்றோடு ஒன்று கலந்து பிரகாசமான வண்ணமயமிக்க உருவப்படத்தையோ  அல்லது இயற்கை காட்சியையோ காணச்செய்யும்.

வேதாகமத்தின் உருவப்படமும் அதைப்போன்றது தான். அருகில் சென்று பார்த்தால், அதின் எண்ணற்ற காரியங்கள் வரைபடத்திலுள்ள (Canvas) புள்ளிகளைப் போன்ற ஒரு அபிப்பிராயத்தை நமக்கு தரலாம். நாம் அதைப் படிக்கும் பொழுது, எம்மாவு ஊருக்கு சென்று கொண்டிருந்த கிலெயோப்பா மற்றும் அவருடைய நண்பர் உணர்ந்தது போல உணரலாம். அந்த பஸ்கா வார இறுதியில் நடந்த துயரமான காரியங்கள், அவர்களுக்கு புரியாத “புள்ளிகள்” போல காணப்பட்டது. “அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பார்” (லூக். 24:21) என்று இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், இப்பொழுது அவருடைய மரணத்தை கண்டு குழம்பியிருந்தார்கள்.

அப்பொழுது தீடீரென அவர்களால் அடையாளம் காணமுடியாத ஒருவர் அவர்களோடு நடந்து வந்தார். அவர்களுடைய உரையாடலில் ஆர்வம் காட்டிய அவர், நீண்ட காலம் காத்திருந்த மேசியாவின் பாடுகளின், மரணத்தின் புள்ளிகளை அவர்கள் இணைத்துப்பார்க்க உதவி செய்தார். பிறகு, உணவு வேளையில் அவர்கள் அவரை அடையாளம் கண்டுக் கொள்ளும்படி தன்னை வெளிப்படுத்தி தீடீரென மர்மமாக மறைந்து போனார்.

ஒருவேளை அவர் கைகளிலிருந்த அவருடைய காயப்பட்ட புள்ளிகள் அவர்களுடைய கவனத்தை ஈர்த்ததா? நமக்குத் தெரியாது. நமக்குத் தெரிந்தது என்னவெனில் புள்ளிகளாகிய வேத வசனத்தையும்,  இயேசுவின் பாடுகளையும் (வச. 27, 44) இணைக்கும் பொழுது, நமது கற்பனைக்கு மேலாக நம்மிடம் அன்புக்கூறும் தேவனைக்ககாண முடியும்