ஏதேனும் ஒன்றை நான் அறிந்து கொள்ள வேண்டுமா?
ஓர் இசைக்கச்சேரியின் போது, பாடகரும், பாடல் இயற்றுபவருமான டேவிட் வில்காக்ஸிடம் பார்வையாளர்களிடமிருந்து வந்த ‘அவர் எவ்வாறு பாடல்களை இயற்றுகிறார்’ என்ற கேள்விக்குப் பதிலளித்தார். பாடல் இயற்றுவதில் மூன்று காரியங்கள் அடங்கியுள்ளது. ஓர் அமைதலான அறை, ஓர் வெற்றுப்பக்கம், நான் ஏதேனும் ஒர் காரியத்தை அறிந்து கொள்ள வேண்டியதிருக்கிறதா? என்ற ஓர் கேள்வி என்று பதிலுரைத்தார். இயேசு கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம், நமது அன்றாட வாழ்க்கையில் தேவனுடைய திட்டத்தை அறிந்துகொள்ள அவர் கூறிய பதில் மிகவும் அதிசயிக்கத்தக்க அணுகுமுறையாக எனக்குப்பட்டது.
இயேசு மக்களிடையே செய்த ஊழியங்கள்…
இலகுவான பாதையா?
வாழ்க்கைப் பாதை எப்பொழுதும் கடினமானதே. தேவன் எப்பொழுதும் இலகுவான பாதையிலே நடத்துவார் என்று நாம் எதிர்பார்த்தோமானால், நாம் பயணிக்கும் பாதை கடினமாகும் பொழுது தேவனிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக்கொள்வோம்.
நீங்கள் எப்பொழுதாவது அவ்வாறு செய்ய நினைத்திருந்தீர்களானால், இஸ்ரவேல் மக்களை நினைத்துக் கொள்ளுங்கள். பல நூறு ஆண்டுகளாக எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு பயணம் செய்தபொழுது, தேவன் எளிதான நேர்வழியில் அவர்களை நடத்தவில்லை. “பெலிஸ்தரின் தேசவழியாய் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தவில்லை” (யாத். 13:17). அதற்கு மாறாக…
கற்றுக்கொண்ட பாடம்
விதவையான மேரி, மோசமான உடல்நிலை பாதிப்பினால் பலவிதமான உடல்நலக் கேடுகளை சந்தித்த பொழுது அவளுடைய மகள், அவளுடைய வீட்டுடன் இணைந்துள்ள புதிய “பாட்டிகள் அறையில்” வந்து தங்க அவளுக்கு அழைப்பு விடுத்தாள். சிநேகிதிகளையும், அவளுடைய பிற குடும்பத்தினரையும் விட்டுவிட்டு பலதூர மைல்களுக்கு அப்பால் செல்லவேண்டியதிருந்தாலும், தேவன் அளித்த பராமரிப்பிற்காக மேரி சந்தோஷப்பட்டாள்.
இந்த புதிய வாழ்க்கை முதல் ஆறு மாதங்கள் மகிழ்ச்சியாகவும், மனரம்மியமாகவும் கடந்த நிலையில், தான் இங்கு வந்தது உண்மையாகவே தேவனுடைய திட்டம் தானா என்ற சந்தேகம் என்னும் சோதனையில் விழுந்து தனக்குள்ளே…
அன்பின் மொழி
என்னுடைய பாட்டி ஓர் ஊழியக்காரியாக மெக்ஸிகோவிற்கு வந்தபொழுது ஸ்பானிய மொழியைக் கற்றுக்கொள்வது அவர்களுக்கு மிகவும் கடினமாகக் காணப்பட்டது. ஒருநாள் அவர்கள் சந்தைக்குச் சென்றார்கள். தான் சந்தையில் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை தனக்கு உதவிசெய்யும் சிறுபெண்ணிடம் காண்பித்து “இது இரண்டு நாக்குகளில் (tongues) இருக்கிறது (லிங்குவாஸ்) என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்துக்கூறியது இரண்டு மொழிகளில் எழுதியிருக்கிறேன் என்று (இடியோமஸ்) இதைக்கேட்டுக் கொண்டிருந்த கசாப்புக்கடைக்காரன் (கறிக்கடைக்காரன்) அவர்களுக்கு இரண்டு பசுவின் நாக்குகள் தேவையாயிருக்கிறது என்று நினைத்து அதைக்கொடுத்தான். என் பாட்டி, வீட்டிற்கு வரும்வரை அதை…
நமக்குத் தேவையானவையும் அதற்கு மேலாகவும்
இங்கிலாந்து கிராமப்புற வயல்வெளியில் ஜி.கே. செஸ்டர்டன், தான் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திலிருந்து எழுந்து நின்று கடகடவென்று மிக சத்தமாய் சிரித்தார். இவ்வாறு திடீரென அவர் மிக சத்தமாய் சிரித்த சத்தத்தைக் கேட்ட பசுக்கள் கூட, கண் இமைக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன.
சில நிமிடங்களுக்கு முன்னர் கிறிஸ்தவ எழுத்தாளரும், பரிந்துரையாளருமான செஸ்டர்டன் மிகவும் மன உளைச்சலில் இருந்தார். அன்று மதியம் அவர் மலைகளில் அலைந்து திரிந்து, பழுப்பு நிற காகிதத்தில் வண்ண, வண்ண சாக்பீஸ்களால் இயற்கைக் காட்சிகளைப் படங்களாக வரைந்தார். ஆனால், அவரிடம் வெள்ளை…