என்னுடைய பாட்டி ஓர் ஊழியக்காரியாக மெக்ஸிகோவிற்கு வந்தபொழுது ஸ்பானிய மொழியைக் கற்றுக்கொள்வது அவர்களுக்கு மிகவும் கடினமாகக் காணப்பட்டது. ஒருநாள் அவர்கள் சந்தைக்குச் சென்றார்கள். தான் சந்தையில் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை தனக்கு உதவிசெய்யும் சிறுபெண்ணிடம் காண்பித்து “இது இரண்டு நாக்குகளில் (tongues) இருக்கிறது (லிங்குவாஸ்) என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்துக்கூறியது இரண்டு மொழிகளில் எழுதியிருக்கிறேன் என்று (இடியோமஸ்) இதைக்கேட்டுக் கொண்டிருந்த கசாப்புக்கடைக்காரன் (கறிக்கடைக்காரன்) அவர்களுக்கு இரண்டு பசுவின் நாக்குகள் தேவையாயிருக்கிறது என்று நினைத்து அதைக்கொடுத்தான். என் பாட்டி, வீட்டிற்கு வரும்வரை அதை அறிந்து கொள்ளவில்லை. இதற்குமுன் அவர்கள் ஒருபோதும் மாட்டு நாக்கை சமைத்ததும் கிடையாது.

இவ்வாறு வேற்று மொழி ஒன்றை நாம் கற்கும்பொழுது தவறுகள் செய்வது தவிர்க்க முடியாத ஒன்றே. சில சமயங்களில் நமது பேச்சு எதிர்மறையாகவே காணப்படும். ஏனெனில் நாம் தேவனைத் துதிக்கிறோம். ஆனால் அதே நாவால் பிறரைப்பற்றி அவதூறாகப் பேசுகிறோம். நமது பழைய பாவ சுபாவம், கிறிஸ்துவில் நாம் வாழும் புதிய வாழ்க்கைக்கு எதிராகப் பேராடுகிறது. நமது வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் நமக்கு தேவனுடைய ஒத்தாசை எவ்வளவு தேவை என்பதை வெளிப்படுத்துகிறது.

நமது பழைய ‘நாவு’ புறம்பே தள்ளப்பட வேண்டும். நமது பேச்சை ஆளுபவராக இயேசுவை நாம் வைத்துக்கொள்வது தான் அன்பு என்னும் புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு ஒரே வழி. பரிசுத்த ஆவியனாவர் நமக்குள் கிரியை செய்யும்பொழுது, பிதாவுக்கு உகந்த வார்த்தைகளை மாத்திரம் நாம் பேசுவதற்கான சுயகட்டுப்பாட்டைக் கொடுக்கிறார். தேவனிடம் நம் ஒவ்வொரு வார்த்தையையும் அர்ப்பணிப்போம்! “கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” (சங். 141:3) என்போம்.