Archives: ஜூன் 2016

அதிர்ச்சியூட்டும் நேர்மை

சபைப் போதகர், மூப்பர் ஒருவரைப் பார்த்து, சபை மக்களை ஜெபத்தில் வழிநடத்தக் கேட்டுக்கொண்ட பொழுது, அவர் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்தார். “தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள், பாஸ்டர்”, நான் ஆலயத்திற்கு வரும் வழியிலெல்லாம் என் மனைவியிடம் வாதாடிக்கொண்டு வந்தேன். எனவே நான் எந்த விதத்திலும் ஜெபம் நடத்தத் தகுதியற்றவன்”, என்று கூறினார். அடுத்த நிமிடம் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. போதகர் ஜெபித்தார். ஆராதனை தொடர்ந்து நடந்தது. இனிமேல் யாரிடமும் தனிமையில் பேசி ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டுமே அல்லாமல் அனைவர் மத்தியிலும் கேட்கக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டார்.…

நிற்பதற்கு உறுதியான இடம்

ஜார்ஜியாவில் உள்ள சாவன்னா பகுதியில் வரலாற்றுப் புகழ்மிக்க நதியிம் நடைபாதைப் பகுதியின் தளங்களில் வெவ்வேறு விதமான கூழாங்கற்களால் தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் அட்லாண்டிக் கடல் பகுதியைக் கடக்கும் கப்பல்களை நிலைப்படுத்த பெரிய சரளைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன என்று உள்ளூர் வாசிகள் கூறுகிறார்கள். ஜார்ஜியாவில் சரக்குகளை ஏற்றியபின் இந்த சரளைக்கற்கள் தேவையில்லாததால், அவற்றை கப்பற்கட்டும் தளத்திற்கு அருகேயுள்ள வீதிகளில் தளம் அமைக்க அவை பயன்படுத்தப்பட்டன. அந்தக் கற்கள் தங்கள் முக்கியமான பணியாக ஆபத்தான நீர்களின் மத்தியில் கப்பல்கள் நிலையாக நிற்பதற்கான சீரிய பணியை செய்து…

அவரது அன்பின் பிரசன்னம்

எங்களுக்கு அருமையான சிநேகிதி சின்டிக்குப் புற்றுநோய் என்று அறிந்த போது எங்கள் மனம் மிகவும் சோர்வடைந்தது. சின்டி மிகவும் துடிப்புடன் செயல்படுபவள். அவளுடன் தொடர்பு கொண்ட அனைவரின் வாழ்க்கையும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே இருந்தது. அவள் வியாதி குறைந்துவிட்டதை அறிந்து நானும், என் மனைவியும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் சில மாதங்களில் அந்த நோய் அவளை அதிகமாய்த் தாக்கியது. அவள் மிகக்குறைந்த வயதிலேயே மரிக்கப்போவதாகவே எங்களுக்குத் தோன்றியது. அவள் வாழ்க்கையின் கடைசி நிமிடங்களைப்பற்றி அவள் கணவன் என்னிடம் பகிர்ந்து கொண்டார். மிகவும் பெலவீனமாக, நடக்க முடியாத நிலையில் இருந்தபொழுது…

கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்தல்

என் நண்பன் என்னிடம் “நான் ஒரு செயலர்” என்று கூறினான். இதையே மக்களிடம் கூறினால், அவர்கள் என்னை சற்று பரிதாபமாகப் பார்ப்பார்கள். ஆனால் நான் எதற்கு செயலராக இருக்கிறேன் என்று அறிந்து கொண்டால், என்னை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்” என்று கூறினான். வேறுவிதத்தில் கூறப்போனால் ஐசுவரியவான்கள் அல்லது பிரபலமிக்க மக்களைச் சார்ந்துள்ள பணிகளல்லாது, வேறு விதமான பணிகளைச் சமுதாயம் தரக்குறைவாகவே தீர்மானிக்கிறது.

எந்தவிதமான பணியாக இருந்தாலும், எப்படிப்பட்ட உலகப்பிரகாரமான எஜமானாக இருந்தாலும், தேவனுடைய பிள்ளைகள் நாம் இயேசுவுக்கே ஊழியம் செய்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். எபேசியர்…