பாய்ந்தோடும் சமாதானம்
எனது உடற்பயிற்சி வகுப்பில் எனக்கு அறிமுகமான ஒரு பெண் “நீ ஒடுக்கக்கூட்டங்கள் நடத்துவதுபற்றி நான் ஆச்சரியப்படவில்லை. நீ மிகச்சிறந்த குணமுடையவளாய் இருக்கிறாய்” என்று கூறினாள். அவள் கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தாலும், அவளது விமர்சனத்தைக் குறித்து சந்தோஷம் அடைந்தேன். ஏனெனில், அவள் என்னிடத்தில் கண்ட சிறந்த நற்குணம் என்பது என்னிடமிருந்த கிறிஸ்துவின் சமாதானம் என்பதை அறிந்தேன். நாம் இயேசுவைப் பின்பற்றும்பொழுது எல்லாப்புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை அவர் நமக்குத் தருகிறார் (பிலி. 4:7). அந்த தேவசமாதானம் நம்மை அறியாமலேயே நம்மிலிருந்து பரவுகிறது.
இயேசு அவருடைய…
ஆடுகளைப் போல
நான், என் தாத்தாவுடன் வடக்கு கானாவில் வாழ்ந்து வந்தபொழுது, ஆடுகளைக் கவனிப்பது எனது அனுதின வேலையாக இருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் புல்வெளியில் மேய்வதற்கு அவைகளை அழைத்துச்சென்று சாயங்காலம் வீடு திரும்புவேன். அந்த நாட்களில் ஆடுகள் அதிக பிடிவாதமாக இருக்கக்கூடியவை என்பதை முதல் முதலாவதாக கவனித்தேன். உதாரணமாக, அவைகள் ஒரு வயலைப் பார்க்கும்பொழுது அவைகளின் உள் உணர்வு தூண்டுதலினால் அவைகள் மேய்வதற்கு நேராக அந்த வயல்களுக்குள் ஓடிவிடும். அதனால், எனக்கும் அந்த வயலின் சொந்தக்காரருக்கும் இடையே அநேக முறை பிரச்சனைகள் ஏற்படும்.
சில சமயங்களில்,…
காடுகள் விழித்தெழும்பினபொழுது
மிச்சிகனில் வாழும் மக்களுக்கு, இளவேனில் காலம் வரும் என்ற நம்பிக்கையினால் குளிர்ந்த பனி காலத்தைக் கடக்க இயலுகிறது. அவர்களது நம்பிக்கைக்கு மே மாதத்தில் பலன் கிடைக்கிறது. அப்பொழுது இயற்கையில் ஏற்படும் மாற்றம் ஆச்சரியப்படத்தக்காக உள்ளது. மே மாதம் 1ம் தேதியில் உயிரற்றதுபோல காணப்பட்ட கிளைகள் அம்மாதக் கடைசியில், இளவேனிற் காலத்தை வரவேற்பது போல, பசுமையான இலைகளுடன் காற்றில் அசைந்தாடுகின்றன. ஒவ்வொரு நாளும் அம்மரங்களில் ஏற்பட்ட மாற்றம், கண்ணால் காணக்கூடியதாக இல்லாவிட்டாலும், அந்த மாதக்கடைசியில் எனது முற்றத்திலிருந்த அனைத்து மரங்களும் பழுத்த சாம்பல் நிறத்திலிருந்து பசுமையான…
கவலைகள் இல்லை
மிகவும் அமைதியாகச் சென்ற விமானப் பயணம் திடீரென அலைக்கழிக்கப்பட ஆரம்பித்தது. விமானத்திற்குள்ளாக பானங்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, விமான ஓட்டி, அனைத்து பயணிகளின் இருக்கை பெல்ட் சரியாக மாட்டப்பட்டுள்ளதா? என்று நிச்சயப்படுத்துமாறு கூறினார். சிறிது நேரத்தில் சமுத்திரத்தில் காற்றினால் அலைப்பட்டு அலைகிற கப்பலைப்போல விமானம் உருண்டு பிறழ ஆரம்பித்தது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கலவரமான அந்த நிலையைக் கையாளுவதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருந்தபொழுது, ஒரு சிறுமி மட்டும் அமைதியாக அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள். விமானம் தரை இறங்கினபின், அந்த சிறுமியால் எவ்வாறு…
ஏன் நான்?
ரூத் அந்நிய நாட்டைச் சேர்ந்த பெண். அவள் ஓர் ஏழை விதவை. இன்றைய உலகில் பல பகுதிகளில் அவள் ஓர் ஆள்தத்துவம் இல்லாதவள் போலவே கருதப்படுவாள். அதாவது, அவளுக்கு ஒரு நம்பிக்கையுடைய எதிர்காலம் உண்டு என்று ஒருவரும் எண்ணமாட்டார்கள்.
ஆயினும், மரித்துப்போன அவளது கணவனின் உறவினர் ஒருவரின் கண்களில் ரூத்திற்கு தயவு கிடைத்தது. அவன் மிகவும் ஐசுவரியவானகவும், அதிக நிலங்களுக்கு உரிமையாளராகவும் இருந்தான். அவனுடைய நிலத்தில்தான் கீழே விழும் தானியத்தை பொறுக்கிக்கொள்ள அவள் உத்தரவு கேட்டாள். அவன் காட்டிய பரிவிற்கு “நான் அந்நியதேசத்தாளாயிருக்க, எனக்கு…