Archives: ஏப்ரல் 2016

மாற்றத்தில்

கானா நாட்டில் இறந்தவர்களின் அறிக்கையை விளம்பரப் பலகைகளிலும், கான்க்ரீட் சுவர்களிலும் ஒட்டி வைப்பது வழக்கம். “வெகு சீக்கிரம் சென்று விட்டார்”, வாழ்வின் கொண்டாட்டம்” “என்ன அதிர்ச்சி” போன்ற தலைப்புகளைக் கொண்ட விளம்பரங்களைத் தங்களுக்கு அருமையானவர்கள் இறக்கும் பொழுதும், அடக்க ஆராதனை நடப்பதற்கு முன்னும் காணலாம். நான் ஒன்றை வாசித்தேன் - மாற்றத்தில் (In transition)

மரியாளும், மார்த்தாளும் தங்கள் சகோதரன் லாசரு மரித்த பொழுது துக்கத்தில் ஆழ்ந்திருந்தது போல நமது நெருங்கிய உறவினரோ அல்லது நண்பரோ மரிக்கும் பொழுது துக்கப்படுகிறோம் (யோவா 11:17-27). இயேசு…

அவருடைய திட்டமா அல்லது நமது திட்டமா?

என்னுடைய கணவன் 18 வயதாக இருக்கும் பொழுது காரை சுத்தம் செய்யும் தொழிலை ஆரம்பித்தார். ஓர் கார் நிறுத்தும் இடத்தை வாடகைக்கு எடுத்து உதவிக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்தி விளம்பரத்திற்காக நோட்டீஸ்களை அச்சிட்டு வெளியிட்டார். தொழில் லாபகரமாக இருந்தது. அவருடைய நோக்கம் என்னவெனில் தான் செய்யும் தொழிலை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தன் கல்லூரிப்படிப்பிற்கு செலவு செய்ய வேண்டும் என்றிருந்தார். அதை வாங்குவதற்கு ஒரு நபர் விருப்பம் தெரிவித்தது அவரை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று காரியம் முடிந்து விடும்…

ஹாலிவுட் மலைகளில் உள்ள சிலுவை

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள தென் கலிஃபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் அனைவரின் மனதில் தோன்றும் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் “டின்செல்டவுன்”க்கு சிமெண்டால் செய்யப்பட்ட நட்சத்திரங்களின் கால் தடங்களைப் பார்க்கவும், அவ்வழியாகக் கடந்து செல்லும் பிரபலங்களை ஓர் முறை பார்க்கவும் வருகிறார்கள். இவ்வாறு வரும் பார்வையாளர், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மற்றுமோர் அடையாளத்தையும் பார்க்காமல் இருக்கவே முடியாது.

ஹாலிவுட் மலைகளில் இலகுவாகக் கண்டு கொள்ளக்கூடிய மிகவும் பிரசித்தி பெற்ற சின்னமாக, நித்தியத்தை முக்கியப்படுத்திக் காட்டும் அடையாளம் ஒன்று அங்கு உண்டு…

வெளியேறிவிடாதீர்கள்

ஓர் பெரிய திருச்சபை ஊழியத்தை விட்டு 1986ம் ஆண்டு ஜான் பைப்பர் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டார். தன்னுடைய பத்திரிக்கையில் “நான் அதிகமாய் சோர்வடைந்துவிட்டேன்; மிகவும் குழப்பமடைந்திருக்கிறேன். ஒவ்வொரு திசையிலும் எதிர்ப்பாளர்கள் இருப்பதை உணர்கிறேன்” என்று அத்தருணத்தில் ஒத்துக் கொண்டார். ஆனால் பைப்பர் வெளியேறிவிட வில்லை. அவர் ஊழியம் செய்த சபையைவிட வளர்ச்சியடையும் ஓர் ஊழியத்தை அவருக்குத் தேவன் கொடுத்து அவரைப் பயன்படுத்தினார்.

வெற்றி என்றச் சொல் இலகுவில் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாகக் காணப்பட்டாலும் ஜான் பைப்பர் வெற்றி பெற்றார் என்றே நாம் கூறவேண்டும். ஆனால்…

ஞானமும் கிருபையும்

அமெரிக்க சிவில் உரிமைத் தலைவர் Dr. மார்டின் லூதர் கிங் ஜூனியர், கோடிக்கணக்கான மக்கள் துயரத்திற்குள்ளாகும் விதத்தில் 1968ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்தியானாபோலிஸில் பெரும்பான்மையான ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் ராபர்ட் F. கென்னடியின் பேச்சைக் கேட்கக் கூடினர். Dr. கிங்கினுடைய மரணத்தைப் பற்றி இன்னும் மக்கள் கேள்விப்படாததால், அவர் அந்த துக்ககரமான செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று. அவர்களுடைய துன்பத்தில் மாத்திரம் அல்ல அவருடைய சகோதரனும், அமெரிக்க ஜனாதிபதியுமான ஜான் F. கென்னடி கொலையுண்டதால் அவருக்குள் முடங்கிக் கிடக்கும்…