அமெரிக்க சிவில் உரிமைத் தலைவர் Dr. மார்டின் லூதர் கிங் ஜூனியர், கோடிக்கணக்கான மக்கள் துயரத்திற்குள்ளாகும் விதத்தில் 1968ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்தியானாபோலிஸில் பெரும்பான்மையான ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் ராபர்ட் F. கென்னடியின் பேச்சைக் கேட்கக் கூடினர். Dr. கிங்கினுடைய மரணத்தைப் பற்றி இன்னும் மக்கள் கேள்விப்படாததால், அவர் அந்த துக்ககரமான செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று. அவர்களுடைய துன்பத்தில் மாத்திரம் அல்ல அவருடைய சகோதரனும், அமெரிக்க ஜனாதிபதியுமான ஜான் F. கென்னடி கொலையுண்டதால் அவருக்குள் முடங்கிக் கிடக்கும் தன் துயரத்தையம் அறிந்தவராய் மக்கள் அமைதிகாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தன் சொற்பொழிவின்பொழுது கென்னடி ஏஸ்சிலியஸ் என்பவர் எழுதிய பண்டைய கால கவிதை ஒன்றினை மேற்கோள் காட்டினார்:
நமது தூக்கத்திலும் கூட, நம்மால் மறக்க இயலாத வேதனைகளை நம் உள்ளத்தில் சொட்டுச், சொட்டாக விழுந்து, நமது விருப்பத்திற்கு எதிராக நமது வேதனையின் மத்தியில் தேவனுடைய ஆச்சரியப்படத்தக்க கிருபையால் நமக்கு ஞானம் பிறக்கிறது.

“தேவனுடைய ஆச்சரியப் படத்தக்க கிருபையால் நமக்கு ஞானம் பிறக்கிறது” என்பது ஓர் சிறந்த விளக்கம். வாழ்க்கையின் மிக மோசமான சமயங்களிலும், ஆச்சரியப்படத்தக்க விதத்தில் தேவ கிருபை நம்மை நிறைத்து ஞானத்தில் வளருவதற்கான தருணங்களை நமக்குத் தருகிறது. “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக் கடவன்; அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” என்று யாக்கோபு கூறுகிறார் (யாக் 1:5). சோதனை என்னும் கடின நிலத்தில் தான் ஞானம் வளருகிறது என்று யாக்கோபு கூறுகிறார் (வச.2-4). அவ்வாறு நாம் தேவனுடைய ஞானத்திலிருந்து கற்றுக் கொள்வது மட்டுமல்லாது, நாம் தேவனுடைய கிருபையில் இளைப்பாறுகிறோம் (2 கொரி 12:9). வாழ்க்கையின் இருண்ட காலங்களில் அவரில் நம் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.