தயவு செய்து உள்ளே வாருங்கள்
ஜென்னியின் வீடு நகர்ப்புறத்திலுள்ள ஒரு தெருவில் இருந்தது. போக்கு வரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பொழுது, அநேக வாகன ஓட்டிகள் அருகிலுள்ள பிரதான சாலையையும் அதிலுள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு விளக்குகளையும் தவிர்ப்பதற்காக, இந்த ஒதுக்கு புறமான சாலையை பயன்படுத்தினார்கள். அதனால் மிகவும் மோசமாக பழுதடைந்த அந்த சாலையை பழது பார்ப்பதற்காக ஒரு சில வாரங்களுக்கு முன்பாக அநேக பணியாட்கள் வந்தார்கள். அவர்கள் அநேக தடுப்புகளையும், உள்ளே நுழையக் கூடாது என்று எழுதப்பட்ட பலகையுடனும் வந்தார்கள். அதைப் பார்த்தவுடன் “சாலையை பழுதுபார்த்து முடிக்கும் வரைக்கும் எனது…
சம்பூரணமாக அருளப்படுதல்
எங்களது தோட்டத்தில் ஹம்மிங் பறவைகளுக்கு ஆகாரம் வைக்கும் தட்டு உள்ளது. அநேக சிறிய பறவைகள் வந்து அதில் வைக்கப்பட்டுள்ள இனிப்பான தண்ணீரை குடித்து மகிழ்வதைப் பார்ப்பதில் நாங்கள் அதிகம் மகிழ்ச்சியடைவோம். சமீபத்தில் வீட்டை விட்டு ஒரு சில நாட்களுக்கு வெளியே செல்ல வேண்டியிருந்தது. அந்த ஆகாரத் தட்டை இனிப்புத் தண்ணீரினால் நிரப்புவதற்கு மறந்துவிட்டோம். நாங்கள் திரும்பி வந்தபொழுது அந்த தட்டு உலர்ந்து காய்ந்து போய் இருந்தது. பாவம் பறவைகள். என்னுடைய மறதியினால் அப்பறவைகளுக்கு சத்துள்ள ஆகாரம் கிடைக்கவில்லை என்று எண்ணினேன். பின்பு அப்பறவைகளைப் போஷிப்பது…
மரியாதையுடன்
இஸ்ரவேல் மக்களுக்கு அரசாங்கத்துடன் சில பிரச்சனைகள் இருந்தன. கி.மு. 586ம் ஆண்டில் பாபிலோன் மன்னனால் இடித்து தள்ளப்பட்ட அவர்களது ஆலயத்தை திரும்ப கட்டி எழுப்ப கி.மு. 500வது ஆண்டின் பின் பகுதியில் வாழ்ந்த யூத மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஆயினும் அந்த நாட்டின் அதிபதி யூதர்கள் ஆலயத்தை திரும்பக் கட்டக் கூடாது என்று கருதி, தரியு மன்னனுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினான் (எஸ்றா 5:6-17).
அந்தக் கடிதத்தில் அந்த அதிபதி அங்கு வாழும் யூதர்கள் ஆலயத்தை பழுது பார்த்து திரும்பக் கட்டுகிறார்கள் என்று…
தேவனுடைய இசையின் வல்லமை
மிகவும் வெற்றிகரமாக ஓடிய இசைப் படங்களில் ஒன்றான சவுண்ட் ஆப்-மியூசிக் என்ற படம் 1965ல் திரைப்படமாக வெளிவந்தது. அந்தப் படம் உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வந்த மக்கள் இருதயங்களையும், கருத்துக்களையும் கவர்ந்ததால் 5 அகடமி பரிசுகளோடு பல்வேறு பரிசுகளையும் பாராட்டுக்களையும் வென்றது. அரை நூற்றாண்டு கழிந்தும் சிறப்பான அப்படம் திரையிடப்படும் பொழுது, பார்வையாளர்கள் அப்படத்தில் வரும் அவர்களுக்கு பிடித்தமான கதா பாத்திரங்களைப் போல உடுப்புகளை உடுத்தி அப்படம் ஒடும் பொழுது, அப்பாத்திரங்களோடு சேர்ந்து பாடல்களை பாடுகிறார்கள்.
இசை என்பது நமது ஆத்துமாவில் ஆழமாக…
தேவனுடைய முகவரிக்கு அனுப்புதல்
தொலைபேசி, மின்னஞ்சல், கைபேசி போன்ற செய்தி தொடர்பு கருவிகள் வரும் காலத்திற்கு முன்பு தந்தி மூலம்தான் விரைவாக செய்திகள் பரிமாறிக்கொள்ளப்பட்டுவந்தன. ஆனால் மிகவும் முக்கியமான செய்திகள் மட்டும் தந்தி மூலம் அனுப்பப்பட்டன. அவைகள் பொதுவாக துக்ககரமான செய்திகளாகத்தான் இருக்கும். ஆகவே “தந்திச் சேவகன் எப்பொழுதும் துக்க செய்தியையே கொண்டுவருவான்” என்று பொதுவாகப் பேசப்பட்டு வந்தது.
பழைய ஏற்பாட்டு நாட்களில் எசேக்கியா யூதாவிற்கு அரசனாக இருந்த பொழுது இஸ்ரவேல் நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அசீரிய மன்னன் சனகரிப் யூதா தேசத்தில் படையெடுத்து வந்து அநேக…