எங்களது தோட்டத்தில் ஹம்மிங் பறவைகளுக்கு ஆகாரம் வைக்கும் தட்டு உள்ளது. அநேக சிறிய பறவைகள் வந்து அதில் வைக்கப்பட்டுள்ள இனிப்பான தண்ணீரை குடித்து மகிழ்வதைப் பார்ப்பதில் நாங்கள் அதிகம் மகிழ்ச்சியடைவோம். சமீபத்தில் வீட்டை விட்டு ஒரு சில நாட்களுக்கு வெளியே செல்ல வேண்டியிருந்தது. அந்த ஆகாரத் தட்டை இனிப்புத் தண்ணீரினால் நிரப்புவதற்கு மறந்துவிட்டோம். நாங்கள் திரும்பி வந்தபொழுது அந்த தட்டு உலர்ந்து காய்ந்து போய் இருந்தது. பாவம் பறவைகள். என்னுடைய மறதியினால் அப்பறவைகளுக்கு சத்துள்ள ஆகாரம் கிடைக்கவில்லை என்று எண்ணினேன். பின்பு அப்பறவைகளைப் போஷிப்பது நானல்ல, தேவனே அவைகளைப் போஷிக்கிறார் என்பதை குறித்து நினைப்பூட்டப்பட்டேன்.

சில சமயங்களில் நமது வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள், நமது பெலன் அனைத்தையும் குறைந்து போகச் செய்கின்றன என்பதும், நம்மைப் புதுபிக்க வேறுயாரும் இல்லையென்றும் எண்ணுகிறோம். மற்ற மனிதர்கள் யாரும் நமது ஆத்துமாவை போஷிப்பது கிடையாது. தேவனே போஷிக்கிறார்.

சங்கீதம் 36ல் தேவனுடைய அன்பைப் பற்றி வாசிக்கிறோம். தேவன் மீது நம்பிக்கைவைத்த மக்களைப் பற்றியும், அவர்கள் சம்பூரணமாக திருப்தியடைவார்கள் என்றும் அந்த சங்கீதம் விவரிக்கிறது. “அவருடைய பேரின்ப நதியிலிருந்து” அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கிறார் (வச.8). அவர் ஜீவ ஊற்று.

நமது தேவைகள் சந்திக்கப்பட நாம் அனுதினமும் தேவன்னன்டை போகலாம். “எனது விசுவாசம், எனக்கு அளிக்கப்பட்ட அனைத்து கிருபைகள், எனது செயல்பாடுகள், எனது வாழ்க்கையின் மகிழ்ச்சிகள், எனது நம்பிக்கை, எனது பரலோக எதிர்பார்ப்புகள் அனைத்துக்குமான ஊற்றுகள், என் தேவனே உம்மில் தான் இருக்கின்றன” என்று ஸ்பர்ஜன் எழுதியுள்ளார்.

பரிபூரணமாக அவர் அளிக்கும் கிருபைகளால் நாம் நிரப்பப்படுவோம். அவருடைய ஊற்று ஒருக்காலும் வற்றாது.