ஜென்னியின் வீடு நகர்ப்புறத்திலுள்ள ஒரு தெருவில் இருந்தது. போக்கு வரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பொழுது, அநேக வாகன ஓட்டிகள் அருகிலுள்ள பிரதான சாலையையும் அதிலுள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு விளக்குகளையும் தவிர்ப்பதற்காக, இந்த ஒதுக்கு புறமான சாலையை பயன்படுத்தினார்கள். அதனால் மிகவும் மோசமாக பழுதடைந்த அந்த சாலையை பழது பார்ப்பதற்காக ஒரு சில வாரங்களுக்கு முன்பாக அநேக பணியாட்கள் வந்தார்கள். அவர்கள் அநேக தடுப்புகளையும், உள்ளே நுழையக் கூடாது என்று எழுதப்பட்ட பலகையுடனும் வந்தார்கள். அதைப் பார்த்தவுடன் “சாலையை பழுதுபார்த்து முடிக்கும் வரைக்கும் எனது வாகனத்தை வெளியே எடுக்க இயலாதே என்று எண்ணி முதலில் வருத்தப்பட்டேன். ஆனால் அந்த அடையாளப் பலகையின் அருகில் சென்று பார்த்தபொழுது, ‘நுழைய அனுமதி இல்லை, இப்பகுதியில் வசிப்பவர்கள் மட்டும் பயன்படுத்தலாம்’ என்று எழுதப்பட்டிருந்தது. எனக்கு வெளியே போய்வர எந்தத் தடையோ பாதைமாறிச் செல்ல வேண்டிய அவசியமோ இல்லை. நான் அப்பகுதியில் வசித்து வந்ததால், நான் விருப்பப்பட்ட நேரத்தில் வெளியே போகவோ, வரவோ எனக்கு உரிமை இருந்தது. நான் தனிச்சிறப்புடையவனாக உணர்ந்தேன்.”

பழைய ஏற்பாட்டில் ஆசரிப்புக் கூடாரத்தில் வாசம் செய்த தேவன்னன்டை போவது ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக இருந்தது, பிரதான ஆசாரியன் மட்டும் வருடத்திற்கு ஒரு முறை, பாவங்களை நிவிர்த்தி செய்யும் பலி செலுத்துவதற்கு மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்லலாம் (லேவி 16:2-20; எபி 9:25-26). ஆனால் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்த வேளையில், தேவாலயத்தின் சிரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாக கிழிந்தது. அதனால் மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே இருந்த தடை என்றென்றைக்கும் நிரந்தரமாக நீக்கப்பட்டது (மாற் 15:38).

நமது பாவங்களுக்காக இயேசு பலியானதினாலே அவரை நேசித்து பின்பற்றுகிற அனைவரும் எந்த வேளையிலும் அவருடைய சமூகத்திற்கு வரலாம். அவரன்டை வருவதற்கு அவர் நமக்கு உரிமை அளித்துள்ளார்.