முதன்மையானதை அலட்சியப்படுத்துதல்
பாதகமான காலநிலையால் ஐந்து முறை காலதாமதமான விண்கலம் “சாலஞ்சர்”. இடிமுழக்கம் போன்ற பேரிரைச்சலையும், தீப்பிளம்புகளையும் கக்கிக் கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்தது. அடுத்த 73 வினாடிகளில் ஏதோ குறைபாட்டினால் விண்கலம் வெடித்துக் சிதறி அதில் பயணித்த ஏழு விண்வெளி வீரர்களும் மாண்டு போயினர்.
இந்தப் பேராபத்து ‘0-ரிங்’ என்ற மிக மென்மையான பாகத்தை இறுக்க தாழிட்டு அடைக்கப்படாததால் ஏற்பட்டது என்று உள்ளிருந்தவர்கள் கூறினார்கள். பேராபத்தை உண்டாக்கிய நாச வேலையான அந்த தவறை “க்கோ ஃபீவர்” - அதாவது மாபெரும் சாதனையை படைக்க வேண்டும் என்ற உத்வேகத்தில்…
முன் நோக்கும் பார்வை
புகழ்மிக்க டச்சு ஓவியக் கலைஞர் ரெம்ப்ராண்ட் தன் 63ம் வயதில் எதிர்பாராத விதத்தில் மரித்த பொழுது அவர் படம் வறையும் திரையில் முற்றுப்பெறாத ஓர் ஓவியம் இருந்தது. இயேசு பிறந்த 40 நாட்களில் அவர் எருசலேம் தேவாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பொழுது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சிமியோன் அக்குழந்தையை ஏந்தியிருந்ததை மையமாகக் கொண்டு அவரது ஓவியம் அமைந்திருந்தது. சிமியோனைப் போல ரெம்ப்ராண்ட் தன் இறுதி காலம் நெருங்கி விட்டது என்று அறிந்து, இவ்வுலகைக் கடந்து செல்ல ஆயத்தமாக இருந்தார் என்று சில கலை வல்லுநர்கள்…
ஓர் சிறந்த காட்சி
நான் சிறுவனாயிருந்த பொழுது மரம் ஏறுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிக உயரம் ஏறும் பொழுது என்னால் அதிகமான காட்சிகளைப் பார்க்க முடியும். சில சமயங்களில் இன்னும் சற்று சிறந்த காட்சிகளைப் பார்ப்பதற்காக அங்குலம், அங்குலமாக மரக் கிளைகளைக் பற்றி ஏறி, என் எடை தாங்காமல் கிளை வளையும் அளவிற்கு ஏறிச் செல்வேன். காலப் போக்கில் மரம் ஏறும் பழக்கம் போய் விட்டது. அது பாதுகாப்பற்றது என்றோ, என் அந்தஸ்திற்கு அது உகந்ததல்ல என்றோ எண்ணி விட்டுவிட்டேன்.
சகேயு என்னும் ஐசுவரியவான் தன்னுடைய…
அமர்ந்திரு
சில வருடங்களுக்கு முன்னர் எனக்கு வரும் கடிதங்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் கொடுப்பேன். இவ்வாறு கடிதத் தொடர்பு இனிதே நடந்து வந்தது. பின் ஃபாக்ஸ் இயந்திரம் வந்ததால் பதில் இரண்டு நாட்களுக்குள் வந்துவிடும். அதுவும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டது. இன்று மின்னஞ்சல், குறுஞ்செய்தி (SMS), கைபேசி போன்றவற்றால் பதில் அதே நாளில் எதிர்பார்க்கப்படுகிறது!
“அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்.” சங்கீதம் 46ல் காணப்படும் நாம் நன்கு அறிந்த இந்த வசனத்தில் ஒர் முக்கியத்துவத்தை உடைய இரண்டு கட்டளைகளை நான் வாசித்தேன். முதலாவது நாம் அமர்ந்திருக்க…
மலையிலிருந்து தோன்றும் காட்சி
எங்கள் இடமோ பள்ளத்தாக்கு. குளிர்காலத்தில் மிகவும் குளிராக இருக்கும். மேகமும், மூடுபனியும் பரவி தரையில் உஷ்ணமான பகுதிக்கு கீழ் குளிர்காற்று இருக்கும்படி செய்யும். ஆனால் நீங்கள் இந்த குளிர்காற்றுக்கு மேலே வந்துவிடலாம். எங்கள் பள்ளத்தாக்கிலிருந்து 7500 அடி உயரமுள்ள ஷாஃபர் பூட் மலையின் பக்கவாட்டில் சுற்றிச் சுற்றிச் செல்லும் ஓர் சாலை அருகாமையில் உள்ளது. சில நிமிடங்கள் காரில் பயணித்தால் மூடு பனியிலிருந்து வெளியேறி, பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரிய ஒளிக்கு வந்து இதமான சூட்டை உணரலாம். மலைமேலிருந்து குனிந்து கீழே பள்ளத்தாக்கை மூடியிருக்கும் மேகத்தின்…