மேரி ஏன் தேவனையும் அவர் குமாரனாகிய இயேசுவையும் விசுவாசித்தாள். ஆனால், இரட்சிப்பைக் கொடுக்க ஏன் இயேசு தம் இரத்தத்தைச் சிந்தினார் என்பதை ஏற்றுக் கொள்ள அவளுக்குத் தயக்கம் ஏற்பட்டது. ஏதேனும் ஒன்றை இரத்தத்தின் மூலம் கழுவி சுத்திகரிக்க வேண்டும் என்பதை யார் ஏற்றுக் கொள்வார்கள்? நியாயப் பிரமாணத்தின்படி, கொஞ்சம் குறைய எல்லாம் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படும். என்று வேதம் கூறுகிறது (எபிரேயர் 9:22). மேரி ஆனின் கருத்துப்படி அது அவளை வெறுப்புக்குள்ளாக்குகிறது.
ஒரு சமயம் அவள் மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்தது. அவள் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை மரபு (பரம்பரை) வழித் தன்மை மாற்றியயமைத்து விட்டது. இந்த நோய் அவள் இரத்தத்தைத் தாக்க ஆரம்பித்ததால் வைத்தியர்கள் அதிர்ச்சியுற்றார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் என் இரத்தத்தை நான் இழந்துவிட்டால், நான் மரித்துப் போய்விடுவேன். ஆனால், இயேசு தன் இரத்தத்தைச் சிந்தியிருக்கிறார் எனவே நான் ஜீவிக்கலாம் என்று சிந்திக்கலாளாள்.
சட்டென எல்லாம் அவளுக்குத் தெளிவாகியது. மேரி ஆன் தன் வேதனைகளுக்கு ஊடாக சந்தோஷத்தையும், சமாதானத்தையும் உணர்ந்தாள். இரத்தத்தில் ஜீவன் இருக்கிறது என்றும் நமக்கும் தேவனுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த ஓர் பரிசுத்த இரத்தம் தேவை என்பதையும் விளங்கிக் கொண்டாள். இன்று அவள் சுக தேசியாக வாழ்ந்து, தன்னுடைய உடல் நலத்திற்காகவும், தனக்காக இயேசு தம்மை பலியாகக் கொடுத்ததற்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறாள்.
பழைய ஏற்பாட்டில் காணப்படும் இரத்த சம்பந்தமான சடங்காச்சாரங்களைப் பற்றிய விளக்கத்தை எபிரேயர் 9ம் அதிகாரம் நமக்கு விளக்குகிறது (வசனம் 16-22). அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு இயேசு ஒரே தரம் பலியிடப்பட்டு மிருகங்கள் பலியிடப்படுவதற்கு ஓர் முற்றுப் புள்ளி வைத்தார் (வச. 23-26). அவர் நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொண்டு, நமது கிருபாதார பலியாகத் தம் இரத்தத்தை சிந்தினார். இதனால் அவருடைய பிரசன்னத்திற்குமுன் செல்லும் தைரியத்தை நாம் பெற்றிருக்கிறோம். நாம் பலியாக்கப்படுவதற்கு பதிலாக தம்மை பலியாக ஒப்புக்கொடுத்து அவர் ஜீவன் நம் ஜீவனாகவும், அவர் பிதா நம் பிதாவாகவும் மாற்றியதற்கு நாம் எவ்வாறு நன்றி செலுத்த முடியும்?