Archives: ஜனவரி 2016

இரட்சிப்பின் ஊற்றுகள்

பொதுவாக மக்கள், பூமியின் மையப்பாகத்திலிருந்து கற்களைத் தோண்டி எண்ணெயோ, தண்ணீரோ இருக்கிறதா என்று கண்டறிய பூமியை ஆழமாய் துளையிடுவார்கள்.

ஆவிக்குரிய வனாந்திரத்திலும், வனாந்திர வறட்சியிலும் வாழும் தன்னுடைய ஜனம் “இரட்சிப்பின் நீருற்றுகளைக்” கண்டடைய வேண்டும் என தேவன் விரும்பினார் என்பதை ஏசாயா 12ல், நீருற்றிலிருந்து பொங்கும் இளைப்பாறுதல் அளிக்கும் குளிர்ந்த நீரோடு ஒப்பிட்டுள்ளார். அநேக ஆண்டுகளாய்த் தேவனைவிட்டு விலகிச் சென்றதால், அந்நியர்களால் கைப்பற்றபட்டு, எங்கும் சிதறடிக்கபடும்படியாய், யூதா தேசத்தை தேவன் ஒப்புக்கொடுத்தார். ஆனாலும் தேவன் அவர்களோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாய், ஒரு சிறு கூட்டம்…

சிறந்த சந்தோஷம்

நான் சிறுவனாய் இருந்த பொழுது, பாதுகாப்பற்றது அல்லது ஞானமற்றது என்று என் பெற்றோரால் கருதப்பட்ட காரியங்களுக்காக, நான் எவ்வளவுதான் கெஞ்சினாலும், திறமையாக வாதாடுவதாகக் கருதி “எல்லோரும் இதை செய்கிறார்கள்” என்று சொன்னாலும், அதற்கு அவர்கள் சம்மதித்ததேயில்லை.

நாம் வளர வளர, நம்முடைய விருப்பத்தின்படி நடப்பதற்காக, நமது வாதங்களில், சாக்கு போக்குகளையும், சாமர்த்தியமான காரணகாரியங்களையும் பிணைத்து, “யாரும் பாதிக்கப்படமாட்டார்கள்.” “இது சட்டவிரோதமானதல்ல”, “முதலில் பாதிக்கப்பட்ட இதை அவன்தான் எனக்கு செய்தான்”, அல்லது “அவளுக்கு இது தெரிய வராது” என்று கூறுவோம். இதில், நம்முடைய தேவையே மற்றெல்லாவற்றையும்…

மேல்நிலையிலிருந்து

ஓர் உயர்ந்த மலையின் நிழலில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஓடும் ஓடையின் ஓரத்தில் என் வீடு உள்ளது. வசந்தகாலங்களில் பனி உருகுவதாலும் இந்த கனமழை பெய்வதாலும் ஒடையில் நீர்வரத்து பெருகி நதியைப் போல காட்சியளிக்கும். அநேகர் அதில் மூழ்கியும் போயிருக்கிறார்கள். ஒரு நாள் இந்த ஒடையின் துவக்கத்தை கண்டறிய விரும்பி ஆராய்ந்த பொழுது, அது ஒரு மலையின் மேலுள்ள பரந்து விரிந்த பனிநிலங்களில் இருந்து துவங்குகிறது என கண்டறிந்தேன். இந்த பனி நிலங்களிலிருந்து பனி உருகி, நீண்ட பயணமாய் அநேக சிற்றோடைகளோடு இணைந்து, பின்பு…

நினைவூட்டும் மணியோசை

இங்கிலாந்து தேசத்தின், லண்டன் மாநகரிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் என்னும் இடத்தில் பிக் பென் (Big Ben) என்று அழைக்கப்படும் கடிகாரத்தையுடைய கடிகார கோபுரம் மிக பிரசித்திபெற்ற ஒரு சின்னமாகும். ஹண்டெல் மேசியா (Handel’s Messiah) என்னும் தொகுப்பிலிருந்து, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிவேன்” என்ற மெட்டினை தழுவிய ராகத்தையே அந்த கடிகாரம் ஒலிப்பதாக பாரம்பரியமாக எண்ணப்படுகிறது. பின்பு, இந்த ராகத்தோடு இவ்வார்த்தைகளும் சேர்க்கப்பட்டு கடிகார அறையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது: “தேவனே, இந்த மணி வேளையும் எங்கள் வழிகாட்டியாய் இருந்தருளும்; ஏனெனில் உம்முடைய வல்லமையால்…

தனிமையான காலம்

கிறிஸ்மஸ் முடிந்து வந்திருந்த அநேக தபால்களின் மத்தியில் ஒரு பொக்கிஷத்தைக் கண்டேன். அது பழைய உபயோகப்படுத்தப்பட்ட அட்டையில் வரையப்பட்ட ஒரு கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை. சாதாரண வாட்டர் கலரினால் வரையப்பட்ட குளிரான மலைப்பிரதேசமும், பசுமையான மரங்களும், கீழ்ப்பாகத்தின் நடுவில், சிவந்த பெர்ரி பழங்களுடன், ஹாலி இலைகளினால் ஆன கட்டத்துக்குள் “உனக்கு சமாதானம்!” என்று எழுதப்பட்ட செய்தியும் இருந்தது.

இதை வரைந்தவர் ஒரு சிறைக் கைதி. அவர் என்னுடைய நண்பர். அவருடைய கைவண்ணத்தை ரசித்தவாறே, அவருக்கு கடிதம் எழுதி இரண்டு ஆண்டுகள் ஆயிற்று என்பதை நினைவு…