1941ல் எழுதப்பட்ட “டிரம் அடிக்கும் சிறுவன்” கிறிஸ்மஸ் என்ற பாடல் மிகவும் பிரபலமானது. ஆரம்ப நாட்களில் டிரம்மின் கிறிஸ்மஸ் பாடல் என்று அழைக்கப்பட்டது. அது செக் நாட்டின் பாரம்பரிய கிறிஸ்மஸ் பாடலைச் சார்ந்து மத்தேயு 1-2, லூக்கா 2 அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில் டிரம் அடிக்கும் சிறுவனைப் பற்றி எதுவும் கூறப்படாவிட்டாலும், கிறிஸ்மஸ் பாடல்கள் ஆராதனையின் உண்மையான அர்த்தம் என்னவென்று விளக்குகின்றன. அந்தக் கிறிஸ்மஸ் பாடலில் கிறிஸ்து பிறந்த இடத்திற்கு வரும்படி மூன்று சாஸ்திரிகள் அந்த சிறுவனைக் கேட்டுக் கொண்டார்கள் அந்த சாஸ்திரிகள் இயேசு பாலகனுக்கு படைப்பதற்காக வைத்திருந்த பரிசுகளை போல, அந்த டிரம் அடிக்கும் சிறுவனிடம் பரிசு ஏதும் இல்லை. ஆகவே அவனிடம் இருந்ததை பரிசாகக் கொடுத்தான். “என்னால் முடிந்த அளவு வெகு சிறப்பாக இயேசு பாலகனுக்கு டிரம் அடித்தேன்” என்றான்.
ஆலயத்தில் இரண்டு காசுகள் போட்ட விதவையைப் பற்றி “இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள்” (லூக்கா 21: 3-4) என்று இயேசு கூறி, உண்மையான ஆராதனை என்றால் என்ன என்பது பற்றி அவர் விளக்கினது அந்த டிரம் அடிக்கும் சிறுவனின் செயலை எதிரொலிப்பதாக உள்ளது.
அந்த டிரம் அடிக்கும் சிறுவனுக்கு இருந்ததெல்லாம் அந்த டிரம் ஒன்றுதான். அந்த விதவைக்கு இருந்ததெல்லாம் இரண்டு காசுதான். ஆனால் அவர்கள் ஆராதித்த தேவன் அவர்களது அனைத்து சொத்திற்கும் தகுதியானவர். நமக்காக அவரையே முழுமையாகக் கொடுத்த அவருக்கு, நம்மையே முழுமையாகக் கொடுப்பதற்கு அவர் தகுதியானவர்.