ஓர் இலையுதிர் காலத்தில் ஒர் நாள் இரவு ஒரு வாலிபனை, அவனது தைரியத்தை நிரூபிப்பதற்காக காட்டுக்குள் அனுப்பிய ஒரு பூர்வீக அமெரிக்க கதை உள்ளது. விரைவில் அந்தக் காட்டுப்பகுதி இருளால் சூழப்பட்டு இரவில் உண்டாகும் பல்வேறு சத்தங்களால் நிறைந்தது. மரங்கள் அங்கும் இங்கும் அசைத்து முனங்கல் சத்தத்தை உண்டுபண்ணின. ஓர் ஆந்தை கிரீச் என்று அலறினது. ஒரு காட்டு நாய் ஊளை இட்டது. அந்த வாலிபன் பயந்தாலும் அவனது தைரியத்தை நிரூபிக்க அந்த இரவு முழுவதையம் காட்டுக்குள்ளேயே கழித்தான். இறுதியில் பொழுது விடிந்தது அவனுக்கு அருகில் ஒரு தனி மனித உருவம் இருப்பதைப்பார்த்தான். அது அந்த இரவு முழுவதும் அவனை கவனித்துக்கொண்டிருந்த அவனது தாத்தாவாகும்.
மோசே வனாந்தரத்தின் உட்பகுதிக்குள் சென்றபொழுது, அக்கினிசுவாலித்து எரிந்தும் வெந்து போகாத ஒரு முட்செடியைப் பார்த்தான். அந்த முட்செடியிலிருந்து தேவன் அவனுடன் பேச ஆரம்பித்தார். மறுபடியும் எகிப்திற்குச் சென்று அங்கு அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேல் மக்களை விடுவிக்க மோசேயை தலைமை தாங்கிச் செல்லுமாறு தேவன் கூறினார். போக மனமில்லாத மோசே “இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்து வர நான் எம்மாத்திரம்” என்று தேவனிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தான்.
“நான் உன்னோடு இருப்பேன்” என்று தேவன் பதிலளித்தார்.
உங்களுடைய பிதாக்களுடைய தேவன் என்னை உங்களிடத்தில் அனுப்பினார் என்று நான் அவர்களுக்குச் சொல்லும் பொழுது, “ அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடம் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்” என்று மோசே தேவனிடம் கேட்டான்.
தேவன் “நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்று கூறி “இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்தில் அனுப்பினார்” என்று கூறு என்றார். இருக்கிறவராகவே இருக்கிறேன் என்ற வார்த்தைகள் “நான் யாராக இருக்கிறேனோ அவராகவே இருப்பேன்” என்றும் அர்த்தம் கொள்ளலாம். அந்த வார்த்தை தேவன் நித்திய நித்தியராகவும், பூரணராகவும் இருக்கிறார் என்ற தேவனின் குணாதிசயத்தை விளக்குகிறது.
தேவன் இயேசுவை விசுவாசிக்கிற அனைவரோடும் என்றென்றும் இருப்பதாக வாக்கு கொடுத்துள்ளார். இரவு நேரம் எப்படி இருட்டாக இருந்தாலும் பரவாயில்லை; நமது கண்களால் காண இயலாத தேவன் நமது தேவைகளை எல்லாம் சரியான முறையில் சந்திக்க ஆயத்தமாக உள்ளார்.